சிம்பு தூண்டிலில் சிக்கிய இளம் நடிகை.. விவரம் அறிந்து ஷாக்கான ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிம்பு சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தவர்.

இதனை அடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான டி ராஜேந்திரன் மகன். தந்தையைப் போலவே பன்முகத் திறமையை கொண்டிருக்கும் இவர் மிகப் பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

சிம்பு தூண்டிலில் சிக்கிய இளம் நடிகை..

எனினும் இவரது நடவடிக்கையின் காரணமாக இடையில் திரை வாழ்க்கையை தொலைத்துவிட்ட சிம்பு மீண்டும் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனத்திற்கு ஏற்ப தற்போது நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்தார்.

இவரது ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கையில் வீழ்ச்சிக்கு காரணம் இளம் நடிகைகளோடு கொண்ட காதல் என்று பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் இவரையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் இணைத்து பல்வேறு வகையான கிசு கிசுக்கள் வெளிவந்தது.

இதனை அடுத்து இவர்கள் காதல் பிரேக்கப் ஆக ஹன்சிகாவோடு அப்படியும் இப்படியுமாக டேட்டிங் சென்று வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்பது போன்ற பேச்சுக்கள் வெகுவாக புகைந்த நிலையில் ஹன்சிகா இவரது காதலுக்கு எண்டு கார்ட் போட்டார்.

இதனை அடுத்து இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை திரிஷாவும் சிம்புவும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது உண்மை இல்லை என்று சிம்பு தரப்பு அறிக்கையை வெளியிட்டு தெளிவு படுத்தியது உங்கள் நினைவில் இருக்கலாம்.

விவரம் அறிந்து ஷாக்கான ரசிகர்கள்..

மேலும் சிம்புவின் உடன்பிறப்புகள் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டதால் முடிந்த வரை சிம்புவுக்கு விரைவாக திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் அவருக்கு வலைவீசி பெண் தேடி வருகின்ற நேரத்தில் சொந்தத்தில் பெண் பார்த்து நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜாதக பொருத்தம் சரி வராததால் திருமண பேச்சுக்கள் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வந்தது.

இதனைத் தொடர்ந்து சிம்பு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார். எனவே சிம்புவின் திருமணம் காதல் திருமணம் ஆகத்தான் இருக்கும் என்று அவரது அப்பா டி ராஜேந்திரன் நாசுக்காக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து நடிகர் சிம்பு 31 வயது நிறைந்த இளம் நடிகையுடன் டேட்டிங் சென்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் வெளி வந்த திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் உடன் தான் இவர் டேட்டிங் செல்வதாக தெரிய வந்தது.

மேலும் அந்த சூட்டிங் சமயத்தில் நிதி அகர்வால் இடம் சிம்பு தன்னை மாமா என்று கூப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்ததால் இவர்கள் இருவர் இடையே காதல் ட்ராக் ஓடுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நிதி அகர்வால் சிம்புவும் டேட்டிங் செய்து வந்ததாகவும் அவர்கள் காதலுக்கு இரு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

எனினும் இந்த தகவலில் உண்மை இருக்கிறதா அல்லது வழக்கம் போல வதந்திதானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் சிம்புவின் திருமணத்தை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி மற்றும் ஷாக்கில் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version