நடிகர் விதார்த் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காற்றின் மொழி. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்திருந்தார்.
நடிகை ஜோதிகா விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் விதார்த் ஜோதிகாவின் கணவராக பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற டர்ட்டி பொண்டாட்டி என்ற பாடலில் நடிகை ஜோதிகா விதார்த்தின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விதார்த் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்று சொன்னவுடனே எனக்கு ஒரு விதமான தயக்கம் இருந்தது.
அவர் ஒரு நடிகை. நான் ஒரு நடிகன். நடிக்கப் போகிறோம்.. அவ்வளவு தான் என்றாலும் ஜோதிகா ஒரு பெரிய இடத்து மருமகள். அவருடைய சினிமா அனுபவம் இதெல்லாம் தாண்டி அவர் ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வருகிறார். மிகப்பெரிய சினிமா பாரம்பரியம் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தில் இருந்து வருகிறார். நடிகர் சூர்யா அவர்களின் மனைவி.
அவருடன் எப்படி ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க போகிறேன் என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால், படத்தின் பூஜை போடும்போது தயங்கிக் கொண்டே தான் இருந்தேன்.
அப்போது, ஜோதிகா என்னை பார்த்து விதார்த் இங்கு வாங்க வாங்க என்று என்னை அழைத்து அவ்வளவு நட்பாக பழகினார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் எனக்கு இருந்த பயம் போனது.
அதுவரை ஜோதிகாவுடன் எப்படி நடிக்க போகிறோம் என்ற ஒரு பயம் எனக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது. மிகவும் எளிமையான ஒரு பெண். நாம் அவரை ஒருவிதமான கற்பனை செய்து வைத்திருப்போம்.
ஆனால், அவர் அவ்வளவு எளிமையாக, எதார்த்தமாக படக்குழுவினருடன் பழகி பணியாற்றக் கூடிய ஒரு நடிகை. நான் யார் தெரியுமா.. என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சகஜமாக பழகக்கூடிய, பேசக்கூடிய ஒரு மனுஷி அவங்க. அதுதான் அவருடைய வளர்ச்சிக்கு காரணமாக நான் பார்க்கிறேன்.
கண்டிப்பாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகர் விதார்த்.
Summary in English : Actor Vidhaarth recently opened up about his fantastic experience working alongside the talented actress Jothika on the movie “Katrin Mozhi.” He couldn’t stop raving about her incredible dedication and passion for her craft.