அப்பா வயது நபருடன் உறவு.. நம்ப வைத்து ஏமாற்றிய நடிகர்.. அதுக்கு கூட போகல.. நடிகை அஞ்சுவின் துயர வாழ்க்கை..!

சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகைகளுக்கு சினிமாவில் ஏற்படும் காதலே அவர்களது வாழ்க்கையில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றன. நடிகை சாவித்திரி மாதிரியான பல பேர் சினிமாவில் உள்ள பிரபலங்களை காதலித்ததன் மூலமாக பிறகு துன்பகரமான வாழ்க்கையை அனுபவித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

பெரிய பெரிய நடிகைகளாக இருந்தும் கோடிகளில் சம்பாதித்தும் கூட ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்காதவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். இப்படியாக கஷ்டங்களை அனுபவித்த நடிகைகளில் நடிகை அஞ்சுவும் முக்கியமானவர்.

அப்பா வயது நபருடன் உறவு

நடிகை அஞ்சு கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகை ஆவார். குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமான இவர் பெரும் நடிகர்களான எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான நடிகர்கள் நடித்த சமகாலத்தில் அந்த படங்களில் இவரும் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

#image_title

அதற்குப் பிறகு இவருக்கு கதாநாயகியாகவும் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் சினிமா துறையை சேர்ந்த ஒரு நபரை இவர் காதலித்து வந்தார். டைகர் பிரபாகர் என்கிற இந்த ஒரு நடிகர் தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.

நம்ப வைத்து ஏமாற்றிய நடிகர்

இவருக்கு அஞ்சுவை விட வயது மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் கூட அஞ்சுவை இவர் காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் தெரிந்தது டைகர் பிரபாகர் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருக்கிறார்.

#image_title

இரண்டாவது திருமணமாகதான் அஞ்சு வயசு அவருக்கு திருமணம் செய்து கொண்டார் இந்த விஷயம் அஞ்சுவிற்கும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் திருமணத்திற்கு பிறகு ஒரு சுகமான வாழ்க்கையும் அவருக்கு கிடைக்கவில்லை.

நடிகை அஞ்சுவின் துயர வாழ்க்கை

தொடர்ந்து டைகர் பிரபாகர் அவரை தொல்லை படுத்திக் கொண்டே இருந்தார் ஒரு கட்டத்திற்கு மேல் இதையெல்லாம் தாங்க முடியாது என்று அஞ்சு பிறகு இந்த உறவுகளை எல்லாம் விட்டு விலகி வந்துவிட்டார். தனது கணவரின் இறப்புக்கு கூட அதற்கு பிறகு அவர் போகவில்லை.

ருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வாய்ப்புகள் கிடைத்து கொண்டுதான் இருந்தன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version