திருமணத்துக்கு முன்னாடியே அந்த பழக்கம் இருந்துச்சு.. ஒரு மாசத்துல சாக இருந்தேன்.. நடிகை டிஸ்கோ சாந்தி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகைகள் என்று கூறினால் எண்ணி இத்தனை பேர்தான் என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு மிக குறைவான அளவில்தான் கவர்ச்சி நடிகைகள் இருந்தனர்.

அப்படியான கவர்ச்சி நடிகைகளில் டிஸ்கோ சாந்தி முக்கியமானவர். இப்பொழுதெல்லாம் சினிமாவில் கவர்ச்சி நடிகைக்கு முக்கியத் துவமே இல்லாமல் போகிவிட்டது. ஏனெனில் ஏதாவது படத்தில் கவர்ச்சி பாடல் வருகிறது என்றாலும் அதை கதாநாயகியே ஆடி விடுகின்றனர்.

திருமணத்துக்கு முன்னாடியே

முன்பெல்லாம் அந்த மாதிரியான கவர்ச்சி உடைகளை கதாநாயகிகள் அணிய மாட்டார்கள் என்பதால் தனியாக அதற்காக கவர்ச்சி நடிகைகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் டிஸ்கோ சாந்தி திருமண வாழ்க்கைக்கு பிறகு நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.

அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கன்னடத்தில் பெரிய நடிகரான ஸ்ரீஹரி என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார் நடிகை டிஸ்கோ சாந்தி.

பழக்கம் இருந்துச்சு

நடிகர் ஸ்ரீ ஹரியை விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் பார்க்க முடியும். ஆனால் ஸ்ரீஹரி இறந்த பிறகு அந்த வாழ்க்கை டிஸ்கோ சாந்திக்கு மிகவும் மோசமாக மாறிவிட்டது. இது குறித்து டிஸ்கோ சாந்தி கூறும் பொழுது திருமணத்திற்கு முன்பே எனக்கு குடிப்பழக்கம் இருந்தது.

எப்போதாவது குடிப்பது என்று இருந்தேன். பிறகு ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்ட பிறகு எங்கேயாவது வெளியில் சென்றால் மட்டும் குடிப்போம் என்று இருந்து வந்தேன். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அதனை ஈடு செய்வதற்காக நான் அதிகமாக குடிக்க துவங்கினேன்.

விழித்திருக்கும் நேரம் எல்லாம் மது அருந்தி கொண்டுதான் இருப்பேன். காலையில் எழுந்து எனது பிள்ளைகளுக்கு சமைத்து வைத்து விடுவேன் அதற்கு பிறகு குடித்துவிட்டு தூங்குவது மட்டும் தான் எனது வேலையாக இருந்தது.

ஒரு மாசத்துல சாக இருந்தேன்

இதனால் எனது உடல் நலம் மிகவும் மோசமானது. ஒரு கட்டத்தில் எனது உடல் எடை மிகவும் குறைந்து 45 கிலோ எடைக்கு சென்றேன். அந்த சமயத்தில் என்னை பரிசோதித்த மருத்துவர் இப்படியே போய்க் கொண்டிருந்தால் இன்னும் ஒரு மாதம் கூட தாங்காது என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இந்த நிலையில் எனது மகன்கள் இருவரும் இதனால் மிகுந்த கவலையுற்றனர். அவர்கள் என்னிடம் வந்து அதிகார தொணியில் பேசி இருந்தால் நான் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் அவர்கள் இருவரும் என்னிடம் கண்கலங்கி நின்றார்கள்.

நீ இப்படி உடல் முடியாமல் போய் இறந்து விட்டால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள். எங்களுக்காக யார் இருக்கிறார் இந்த சமயத்தில் கூட யாரும் சொந்தக்காரர்கள் என்று வரவில்லையே என்று கேட்டனர்? அவர்கள் கூறியது உண்மைதான் அதனை யோசித்த நான் அதற்குப் பிறகு குடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்படி முடிவு செய்து மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது இப்பொழுது வரை ஒரு முறை கூட நான் குடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் டிஸ்கோ சாந்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version