அட கஸ்மாலம்.. தேவையில்லாம மூக்கை நுழைச்சு.. ஒருக்கப்பட்டது பத்தாதா? கஸ்தூரி அலப்பறை!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அண்மையில் விசிக தங்களது கூட்டணியில் இடம் பிடிக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டதை அடுத்து ஆளும் கட்சி கூட்டணி அனைத்தும் 2026 ஆம் தேர்தலில் ஒவ்வொன்றும் இல்லாமல் போகக் கூடிய வகையில் பேசிய விஷயத்தை கேட்ட நடிகை கஸ்தூரி விஜய் வாயில் சர்க்கரை போடுவேன் என்று கூறிய விவகாரம்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் தனது 69ஆவது படத்தோடு திரையுலகை விட்டு நீங்கி முழுநேர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.

அதற்கான முன்னெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து அண்மையில் இவர் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் நடந்து முடிந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

அட கஸ்மாலம்.. தேவையில்லாம மூக்கை நுழைச்சு..

இந்த மாநாட்டில் தன்னை விமர்சித்தவர்களின் மத்தியில் கூத்தாடிகள் தான் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அண்டை மாநிலத்தை ஆண்டு இருக்கிறார்கள் என்று யாருமே எதிர்பாராத வண்ணம் ஆவேசமாக பேசி தன்னுடைய மற்றொரு முகத்தை காட்டியிருந்தார். 

இதை அடுத்து மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக மக்களுக்கு தலைவர் விஜய் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் பலரும் காத்திருக்கக் கூடிய வேளையில் விசிக விவகாரம் இணையங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

அதுவும் அம்பேத்கர் நினைவு நாளில் விசிக தொலைப் பொதுச் செயலாளர் தொகுத்த புத்தகமான எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற அந்த புத்தக விழா தவெக தலைவர் விஜயும் விசிக தலைவர் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் இந்த விவகாரம் பரபரப்பாக பேச்சுக்களை கிளப்பி விட புத்தக வெளியீட்டு விழா அரசியலாக மாற்றப்படுகிறது என்று சொல்லி அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் திருமாவளவன் விலகியதை அடுத்து இந்த பிரச்சனை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது. 

மேலும் அந்த விழாவில் விஜய் பேசும் போது புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து இருப்பதை உணர முடிகிறது. திருமாவளவனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றாலும் அவரது மனம் முழுவதும் இங்குதான் இருக்கும் என்று குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து திருமாவளவன் தனது கருத்தினை தெரிவிக்கையில் விஜயின் மனம் மேடையில் இல்லாமல் என் மீது இருந்தது. மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அந்த நெருக்கடிக்கு இணங்கும் அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல என்று பதிலளித்திருந்தார். 

ஒருக்கப்பட்டது பத்தாதா? கஸ்தூரி அலப்பறை..

இதை அடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை என்று ஒற்றை வரியில் பதிலளித்து அவர்  விலகினார் இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இதை அடுத்து விஜய்க்கு ஆதரவாக பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்வதோடு அவருக்கு ஆதரவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

 அதிலும் குறிப்பாக விஜய் தரப்பில் இருந்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருமாவளவனின் விசிக கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்த்துவிட பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. 

இந்த சூழ்நிலையில் நடிகை கஸ்தூரி விஜயின் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என்று விதை கூறியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் என்று கூறிய விஷயம் தற்போது பலரை கவனத்தையும் ஈர்த்து விட்டது. 

ஏற்கனவே இது போல ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டு ஜாமினில் வந்திருக்கக் கூடிய இவர் மீண்டும் எதற்கு வாயை கொடுத்து மாட்டிக் கொள்கிறார் என்று பலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். 

Summary in English: Recently, actress Kasthuri Shankar made waves with her comments on TVK Vijay’s speech regarding the DMK party, and it’s been trending like crazy! If you haven’t caught up yet, Kasthuri didn’t hold back in expressing her thoughts on social media. Her take sparked a lot of conversations among fans and followers alike.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam