இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.. என் உறுப்பை பத்தி அசிங்கமா.. மஞ்சிமா மோகன் வீடியோ…!

நடிகை மஞ்சிமா மோகன் கடந்த 1993 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் பிரியதர்ஷினி ஆகும்.

1997 இல் வெளியான கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தி இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்ஃபி என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஏற்கனவே அழகாக இருந்த இவரை இயக்குனர் கௌதம் மேனனின் கேமரா இன்னும் அழகாக காட்டியது. அதனை தொடர்ந்து தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இடையில் தேவராட்டம் திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் கௌதம் கார்த்திக் உடன் காதல் வயப்பட்டார் நடிகை மஞ்சிமா மோகன். சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனர்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் நடிகை மஞ்சிமா மோகன். இவருடைய திருமணத்திற்கு பிறகு இவருடைய உடல் எடை குறித்து பலரும் மோசமான கருத்துக்களை பதிவு செய்து மஞ்சிமா மோகனை கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இதனால் கடுப்பான நடிகை மஞ்சிமா மோகன் சமீப காலமாக எனக்கு சில கமெண்ட்கள் வருகின்றன. அந்த கமெண்ட்களை செய்வது யார் என்ற இன்ஸ்டாகிராம் பெயர்களை நான் வெளியிட விரும்பவில்லை. நான் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என ஒரு பதிவை எழுதி இருந்தார்.

இதன் மூலம் என்னுடைய புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து என்னை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக பதிவு செய்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள இவர் தன்னுடைய உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக என்னுடைய உடலை பற்றியும் என்னுடைய உறுப்புகள் பற்றியும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. நான் எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன..? என்று சொல்லும் விதமாக தன் கணவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நடிகர் மஞ்சிமா மோகன் ஈடுபட்டு இருக்கிறார் என தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் உடலை கிண்டல் செய்பவர்கள் பற்றி எங்களது கவலை இல்லை. உங்களுடைய அழகே நீங்கள் புசுபுசு என இருப்பது தான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Manjima Mohan has recently taken the internet by storm with her latest workout video, and it’s not hard to see why. In a world where fitness is often overshadowed by fleeting trends, Manjima’s dedication to her health and wellness shines through in every frame.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam