தனுஷ்க்கும் எனக்கும் அந்த உறவு இருக்கு… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை மந்த்ரா.. நம்பவே முடியலையே..!

1990களில் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை மந்த்ரா. எப்படி ரம்பா ஒரு தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்டாரோ அதேபோல ஒரு தொடை அழகியாக அப்பொழுது இருந்து வந்தவர்தான் நடிகை மந்த்ரா.

அப்போதைய காலகட்டத்தில் பெரும் நடிகையாக இருந்தாலும் கூட 2000க்கு பிறகு இவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. 2000க்கு பிறகு தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன அப்பொழுது நிறைய பேருக்கு வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது.

தனுஷ்க்கும் எனக்கும் அந்த உறவு இருக்கு

அப்படியாக வாய்ப்பு இழந்த ஒரு சில நடிகைகளில் மந்த்ராவும் முக்கியமானவர். 90களில் இவர் மிகவும் கவர்ச்சியான ஒரு நடிகையாக நடித்து வந்தார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான பிரியம் திரைப்படத்தின் மூலமாக தான் முதன்முதலாக கதாநாயகியாக மந்த்ரா அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ரெட்டை ஜடை வயசு என்கிற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். அதேபோல லவ் டுடே திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை மந்த்ரா

இப்படி தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களிலேயே இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஒரு சில காலங்களில் புது நடிகைகளின் வளர்ச்சி காரணமாக இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இப்போதைய தலைமுறையினரை பொருத்தவரை அவர்களுக்கு மந்த்ரா என்றால் யார் என்று தெரியாது என்று கூறலாம் இந்த நிலையில் சினிமாவில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து மந்த்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

நம்பவே முடியலையே

அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும்பொழுது நடிகர் தனுஷை பற்றி அவரிடம் கேட்டனர். அப்பொழுது அதற்கு பதில் அளித்த மந்த்ரா இப்பொழுதுதான் தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தை பார்த்தேன்.

எனக்கு மிகவும் அந்த படம் பிடித்திருந்தது மேலும் தனுஷ் என்னுடைய கிளாஸ்மேட் ஆவார். நானும் அவரும் பள்ளி பருவத்தில் ஒன்றாக தான் படித்தோம் என்று மந்த்ரா கூறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து கூறிய மந்த்ரா கூறும் பொழுது நானும் தனுஷும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு நான் சீனியர் என்று கூறி இருக்கிறார். பார்க்கும் பொழுது தனுஷை விட இரண்டு வயது மந்த்ரா மூத்தவர் என்று தெரிகிறது ஆனால் தனுஷிற்கு மிகவும் முன்பிருந்தே இவர் தமிழ் சினிமாவில் நடித்து வந்து கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version