நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்தான தன்னுடைய பார்வையை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நான் அஜித்துடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
ஆனால், அவருடைய ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது பற்றி பலருக்கும் தெரியாது. அதனை, தற்போது கூறுகிறேன் என கூற தொடங்கினார்.
நான் சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்தில் நடிகர் அஜித்திற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.. நல்ல நடிக்கும் நடிப்பதற்கு ஸ்பேஸ் இருக்கக்கூடிய நிறைய நல்ல நல்ல படங்களில் நடிகர் அஜித் அப்போது நடித்துக் கொண்டிருந்தார்.
கடகடவென அடுத்தடுத்த படங்களில் அவருடைய மார்க்கெட் வளர்ந்து கொண்டிருந்தது. அவருடன் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என நிறைய படங்களில் ஆசைப்பட்டேன்.
கடைசியாக வாலி படத்தில் அவருடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நல பிரச்சினை காரணமாக அந்த படம் நிறுத்தப்பட்டது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மாதங்கள் மருத்துவ ஓய்வில் இருந்தார். இதனால், அந்த கால் சீட் வீணாகிவிட்டது. அதன் பிறகு மீண்டும் அந்த படம் பிடித்து தொடங்கிய போது என்னால் நடிக்க முடியவில்லை.
ஏனென்றால், நான் வேறு ஒரு இடத்தில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்தேன். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்போது கூட நான் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் நடித்திருக்க வேண்டிய படம் தவற விட்டுவிட்டேனே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.
எஸ்.ஜே.சூரியாவும் என்னை பார்க்கும் போதெல்லாம் பாருங்க மேடம் நீங்க பண்ணி இருக்க வேண்டிய படம். நானும் உங்களுடன் பணியாற்றி அனுபவம் கிடைத்திருக்கும். மிஸ் ஆகிடுச்சு. என்றெல்லாம் என்னிடம் வேதனை போங்க பேசுவார் என பேசி இருக்கிறார் நடிகை மீனா.
Summary in English : In a recent interview, actress Meena opened up about her experience working in the film industry and shared some candid thoughts on why she couldn’t pair with Ajithkumar in the iconic movie “Vaali.” She reminisced about the intense chemistry that was required for their roles, explaining that sometimes, the magic just doesn’t happen.