தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை Nithya Menon.
அதன் பிறகு மெர்சல், காஞ்சனா 2, ஓகே கண்மணி, சைக்கோ என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருது இவருக்கு கொடுக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விருது கார்கி திரைப்படத்தில் நடித்திருந்தால் நடிகை சாய் பல்லவிக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். விருது வாங்குகிற தகுதி நடிகை நித்யா மேனனுக்கு இல்லை என சில ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
அப்படியான விமர்சனங்களுக்கு நடிகை நித்யா மேனன் தற்போது பதில் கொடுத்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது, இந்த அவார்ட் ஒன்னும் ஒரு வருஷம் மட்டும் கொடுக்க போறது கிடையாது. எல்லா வருடமும் கொடுப்பார்கள். தகுதியான எல்லாருக்குமே இந்த விருது கண்டிப்பாக கிடைக்கும்.
இந்த விருதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு நான் ஒன்னும் நடுவர் கிடையாது. இந்த விருது என்னுடைய ஒரு படத்துக்கு கிடைத்ததாக நான் பார்க்கவில்லை.
என்னுடைய பல வருட உழைப்பின் பயனாகத்தான் திருச்சிற்றம்பலம் படம் எனக்கு கிடைத்தது. அந்த படத்தின் பயனாக எனக்கு இப்போது விருது கிடைத்திருக்கிறது.
இந்த விருதை பெற்ற பிறகு பலரும் என்னுடைய நடிப்பு பயணத்தை பாராட்டி பேசுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
ஆனால் அதே சமயம் இதை தவறாக பேசுகிற ஒரு கூட்டமும் இருக்கிறது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் ஒருவரை பற்றி தப்பு தப்பாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அப்படி பேசுபவர்கள் பேசிக்கொண்டே போகட்டும் அதைப் பற்றி நான் கண்டுக்க கண்டு கொள்ளப் போவதில்லை. அடுத்தவங்களை பத்தி பேசுறவங்களுக்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதியை கொடுக்கவே கூடாது.
நம்முடைய வேலையை தொடர்ந்து செய்வோம். அதுதான் அவர்களுக்கு சரியான பதிலை கொடுக்கும் என சாய்பல்லவிக்கு தான் இந்த விருது கிடைக்க வேண்டும் என்று நடிகை நித்யா மேனனை விமர்சித்து அவர்களுக்கு நடிகை நித்யா மேனன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
கார்கி படத்தில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், அதே நேரம் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சோபனா கதாபாத்திரத்திலும் நடிகை நித்யா மேனன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அந்த படத்தை பார்த்து முடித்துவிட்டு வரும்பொழுது நித்யா மேனனுடன் சேர்ந்து அந்த படத்தில் பயணித்தது போன்ற ஒரு அனுபவம் ரசிகர்களுக்கு கிடைத்தது.
சோகமாக இருப்பது போன்று யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். ஆனால், சோபனா போன்று ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலான விஷயம்.
இதற்காகத்தான் நடிகை நித்யா மேனனுக்கு இந்த தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டாட வேண்டுமே தவிர இந்த நடிகைக்கு கொடுத்திருக்க வேண்டும்.. இந்த நடிகைக்கு கொடுத்து இருக்கக் கூடாது என தர்க்கம் பண்ணுவதில் அர்த்தம் கிடையாது.
இது குறித்து சாய்பல்லவியே தன்னுடைய கருத்தை பதிவு செய்யாத போது இணையவாசிகள் சிலர் நித்தியாமேனனை கலாய்ப்பதற்காகவே இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என சக இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய பார்வையை பதிவு செய்யலாம்.
Summary in English : In a recent turn of events, actress Nithya Menon addressed the trolls surrounding her National Award win for her performance in the critically acclaimed film “Thiruchitrabalam.” With grace and poise, Menon stood firm against the negativity, emphasizing that awards are not just accolades but recognition of hard work and dedication. She articulated that while opinions may vary, it is essential to respect the artistic choices made by both actors and filmmakers.