ராஜமௌலிக்கிட்ட அந்த விஷயத்துக்கு மறுப்பு சொல்ல முடியாது… நடிகைகளுக்கு உள்ள சிக்கல்.. பொசுக்குன்னு போட்டு உடைத்த பூஜா ஹெக்தே..!

ஆரம்பத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு தமிழில் செல்வாக்கு கிடைக்காமல் போன ஒரு நடிகைதான் நடிகை பூஜா ஹெக்டே. முதன்முதலாக முகமூடி திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் அவருக்கு சரியாக நடிக்க கூட வந்து இருக்காது. ஏனெனில் அதுதான் அவரது முதல் படம். இருந்தாலும் கூட ஓரளவு நடித்து இருப்பார். அந்த திரைப்படம் வெளியான பொழுது அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

ராஜமௌலிக்கிட்ட அந்த விஷயத்துக்கு

அதனை தொடர்ந்து பூஜா ஹெக்டேவிற்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிறகு சில வருடங்கள் வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்தார் பூஜா ஹெக்டே.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார் தெலுங்கு சினிமாவில் அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைக்க துவங்கியது. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவிலும் கூட அவரது நடிப்பு அவ்வளவு பிரமாதமாக இல்லை.

நடிகைகளுக்கு உள்ள சிக்கல்..

ஆனால் போகப் போக தன்னிடம் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதை சரி செய்து கொண்டார் பூஜா ஹெக்டே பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் வெற்றிகளை கொடுக்கும் ஒரு நடிகையாக மாறினார் பூஜா ஹெக்டே.

தொடர்ந்து தெலுங்கில் பிரபலமாக இருந்த மகேஷ் பாபு, ராம்சரண், அல்லு அர்ஜுன் மாதிரியான நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார் பூஜா ஹெக்டே. இப்படி பெரிய வெற்றிகளை கொடுத்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பீஸ்ட் திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் அந்த படம் தோல்வி படம் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் தோல்விக்கு காரணம் பூஜா ஹெக்டேதான் அவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் தொடர்ந்து தோல்வியை காண்கின்றன. என்று ஒரு வதந்தி கிளம்பியது.

போட்டு உடைத்த பூஜா ஹெக்தே

இந்த நிலையில் அந்த சமயத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்த பூஜா ஹெக்தே நடிகைகளுக்கு இருக்கும் சில பிரச்சனைகள் குறித்து பேசி இருப்பார். அதில் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் நடிக்கும் எல்லா திரைப்படத்திலும் அதில் உங்களுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டுவிட்டு தான் நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பூஜா ஹெக்டே கூறும் பொழுது பெரும்பாலும் நான் நடிக்கும் கதைகளில் ஒன்று கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிப்பேன் இல்லை படத்தின் கதை நன்றாக இருக்கிறது என்றாலும் நடித்து விடுவேன்.

ஆனால் பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிப்பதற்கு கேட்கும் பொழுது அவர்களிடம் நாம் கதை கேட்க முடியாது. உதாரணத்திற்கு இயக்குனர் ராஜமௌலி ஏதாவது ஒரு படத்தில் நடிப்பதற்கு என்னிடம் கேட்கிறார் என்றால் அவரிடம் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்று நான் கேட்க முடியாது. அந்த மாதிரி இயக்குனர்களுடன் உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியது தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version