ஏற்கனவே ஹீரோயின் தப்பிச்சி ஓடிடுச்சி.. என்னைய அசிங்கமாக்கிட்டார்.. நடிகை சங்கீதாவை வச்சி செய்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைப்பது என்பது எல்லா திரைப்படத்திலும் கிடைத்துவிடாது. பெரும்பாலும் திரைப்படங்களில் நடிகைகளுக்கான கதாபாத்திரங்கள் கிடைக்கும் பொழுது அதை மிக சுமாரான கதாபாத்திரங்களாகதான் இருக்கும்.

ஏதோ பேருக்கு படத்தில் கதாநாயகி என்று ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கதாபாத்திரமாக இருக்கும். ஆனால் அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் பெரிதாக கிடைக்காது.

ஹீரோயின் தப்பிச்சி ஓடிடுச்சி

அவர்கள் தொடர்ந்து சினிமாவில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் திரைப்படத்தில் வரும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அவர்கள் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரமில்லாமல் திரைப்படம் முடியாது என்கிற அளவில் முக்கியமான கதாபாத்திரமாக அது இருக்க வேண்டும்.

அப்படியாக நடிகை சங்கீதாவிற்கு கிடைத்த கதாபாத்திரம்தான் பிதாமகன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம். நடிகை சங்கீதா பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் 90ஸ் கிட்ஸ் களுக்கு மத்தியில் அவருக்கு ஒரு வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் என்றால் அது பிதாமகன் திரைப்படம்தான்.

என்னைய அசிங்கமாக்கிட்டார்

பிதாமகன் திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். பொதுவாக பாலா திரைப்படங்கள் இயக்கும்போது சிறப்பான நடிப்பை எதிர்பார்ப்பார். இந்த நிலையில் பிதாமகன் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நடிகையை தேடி வந்தார் பாலா.

அப்பொழுது சங்கீதாவிடம்தான் முதலில் நடிப்பதற்கு கேட்டார். ஆனால் சங்கீதா கால் சீட்டு எதுவும் இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். இந்த நிலையில் அடுத்து நிறைய நடிகைகளை தேடி வந்தார் பாலா பிறகு வேறு ஒரு இயக்குனரிடம் சங்கீதா இந்த விஷயத்தை கூறும்பொழுது அந்த இயக்குனர் சங்கீதாவை திட்டி இருக்கிறார்.

சங்கீதாவை வச்சி செய்த இயக்குனர்

பாலாவிடம் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். நீ வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு வந்துள்ளாயே? என்று கேட்டுள்ளார் அதற்கு பிறகு சங்கீதா திரும்ப பாலாவுக்கு போன் செய்து அது குறித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

உடனே பாலா பரவாயில்லை இப்பொழுது நடிக்க வா என்று அழைத்திருக்கிறார். பிறகுதான் தெரிந்துள்ளது அந்த நடிகை கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்த நடிகை பாலா தொல்லை தாங்காமல் ஓடிவிட்டார். பிறகு சங்கீதா அந்த கதாபாத்திரத்தில் நடித்து அதிக வரவேற்பு பெற்றார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் சங்கீதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version