15 வருஷம் நான் எங்கே போனேன்..? முதன் முறையாக ரகசியம் உடைத்த பாக்யராஜ் மகள் சரண்யா..!

பல படங்களில் நடித்த நடிகைகளை விட ஒரு சில படங்களில் நடித்த நடிகை நம் மனதில் அப்படியே படிந்து விடுவார். அந்த வரிசையில் சரண்யா பாக்யராஜ் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

தமிழ் திரை உலகில் 2006 ஆம் ஆண்டு இவை நடிப்பில் வெளி வந்த பாரிஜாதம் படத்தை சுமதி என்ற கேரக்டரை அற்புதமாக செய்திருந்தார். இதை அடுத்து 2007 ஆம் ஆண்டு டிக் டிக் என்ற தமிழ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

15 வருஷம் நான் எங்கே போனேன்..

இந்நிலையில் நடிகை சரண்யா பாக்யராஜ் குறித்து பல்வேறு வகையான விஷயங்கள் இணையங்களில் கசிந்த போதும் 15 வருடங்கள் கழித்து அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த 15 வருடங்களாக அவர் எங்கே சென்றார் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது போன்ற விஷயங்களை கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இத்தனை ஆண்டுகள் கேமராவுக்குப் பின் இருந்து அவர் பணியாற்றிய விவரத்தை சொன்னதோடு ஒரு மிகச்சிறந்த காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதையும் கூறியிருந்தார். மேலும் முதல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கு காரணம் தனது அப்பா தான் என்பதை விளக்கமாக கூறினார்.

மேலும் சிறு வயதாக இருக்கும் போது அவர் அப்பா ஷூட்டிங் முடித்து வந்த பிறகு மேகப்பை நீக்குகின்ற வேலையை தான் செய்ததாக கூறியிருக்கிறார். மேலும் தற்போது தாத்தாவாக வாழ்க்கையை மிக அதிகமாக என்ஜாய் செய்வதாக கூறியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

முதன் முறையாக ரகசியம் உடைத்த பாக்யராஜ் மகள் சரண்யா..

இந்நிலையில் முதன் முறையாக இத்தனை காலம் எங்கு இருந்தோம் என்ன செய்தோம் என்ற ரகசிய உடைத்த பாக்யராஜ் மகள் சரண்யா வீட்டில் தனது அம்மா தனக்கு ஒரு தோழி போல இருப்பார். இந்த மாதிரியான உறவை எங்கும் பார்க்க முடியாது.

தனக்கும் தனது தம்பிக்கும் ஒன்றரை வயது மட்டுமே வித்தியாசம் என்பதால் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய நாங்கள் மிகுந்த பாசத்தோடும் இருப்போம். எந்த விஷயம் என்றாலும் அது அப்பாவிடம் சொன்னால் அது நடந்து விடும் என்பதால் அப்பாவிடம் தான் அதிக அளவு ஷேர் செய்வேன்.

இன்னுமே அக்கா தம்பி இடையே சண்டைகள் நடப்பது வழக்கமாக உள்ளது. மேலும் இத்தனை ஆண்டுகளாக எங்கும் செல்லவில்லை சினிமா துறையில் இருக்கும் அத்தனை துறைகளுக்குள் நான் பணி புரிந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று பக்குவமாக பேசி அனைவரையும் அசத்தார்.

பெற்றோர்கள் சினிமா துறைக்காக செய்த செயல்களில் ஒரு கால்பங்கு கூட தாங்கள் செய்தது கிடையாது. எனினும் செலிபிரிட்டி என்ற வகையில் எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு இன்று வரை என்னால் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவு தலைக்காட்டாததால் தான் இத்தனை காலம் நான் எங்கு சென்றேன் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த 15 ஆண்டுகளாக நான் சினிமா துறையில் தான் இருக்கிறேன் என்ற ரகசியத்தை மிக நேர்த்தியான முறையில் பாக்யராஜின் மகள் சரண்யா பேட்டியில் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam