மீண்டும் பார்த்திபனுடன் சேருவீர்களா..? நடிகை சீதா நறுக் பதிலடி..!

In a surprising turn of events, actress Seetha has made it clear that she won’t be reuniting with actor Parthiban.

நடிகை சீதா அவர்களிடம் அவருடைய முன்னாள் கணவர் பார்த்திபனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வீர்களா…? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? என்ற கேள்வி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர் என்ன பதில் கொடுத்து இருக்கிறார் என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது.

புதியபாதை என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் நடிக்கும் பொழுது அவருடன் காதல் வைக்கப்பட்டார் நடிகை சீதா. அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிகை சீதா நடிப்பதை பார்த்திபன் விரும்பாத காரணத்தினால் தன்னுடைய கணவருக்காக தான் மிகவும் நேசித்த சினிமா துறையை விட்டுக் கொடுத்தார் நடிகை சீதா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தன.ர் விவாகரத்து செய்த பிறகு நடிகை சீதா தரப்பில் இருந்து பார்த்திபன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால் நான் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என இருந்தேன். எல்லோருக்கும் இருக்க கூடிய ஆசை தானே இது என கூறினார். இதை தாண்டி வேறு எதையும் நடிகை சீதா கூறவில்லை.

இதன் மூலம் நடிகர் பார்த்திபன் வேறு நடிகைகளுடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் நடிகை சீதா அவரை பிரிந்து இருக்கிறார் என்று யூகங்கள் வலம் வந்தன.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சீதாவிடம் பார்த்திபனுடன் மீண்டும் சேர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை சீதா நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது போலவே எப்போதும் எனக்கு ஆசைப்படுகிறேன். இந்த கேள்விக்கு அவ்வளவுதான் பதில். இதற்கு மேல் நான் இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

Summary in English : In a surprising twist, actress Seetha recently revealed that she won’t be reuniting with actor Parthiban for any upcoming days. Fans were buzzing at the thought of seeing these two talented stars back together on real life.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam