சிறுமியாக இருந்தப்போதே எதிர் வீட்டுக்காரர் செஞ்ச வேலை.. அப்பா கடுப்பாயிட்டார்.. ஷகிலா கூறிய திடுக்கிடும் உண்மைகள்..!

மலையாள சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகைகளில் ஷகிலா மிக முக்கியமானவர். இளம் வயதிலேயே சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஷகிலா.

ஆனால் தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவரை கவர்ச்சி நடிகையாக மாற்றியது மலையாள சினிமா. இது குறித்து நிறைய பேட்டிகளில் ஷகிலா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது 15 வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தேன்.

சிறுமியாக இருந்தப்போதே

குடும்ப கஷ்டம் அதிகமாக இருந்தது. அதனால் எனது தந்தை ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்றால் கதை என்னவென்று கூட கேட்காமல் சம்பளத்தை வாங்கி விடுவார். அதனால் அதற்கு பிறகு கதை நன்றாக இல்லை அல்லது படம் மோசமான படம் என்றாலும் கூட அதில் நடிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

மேலும் 15 வயதில் இந்த விவகாரங்களை பற்றி எனக்கு பெரிதாக தெரியவில்லை என்பதால் அப்பொழுது இருந்த இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறி இருக்கிறார். மேலும் அவரது வாழ்வில் சிறுவயதில் நடந்த நிறைய மோசமான நிகழ்வுகளை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அப்பா கடுப்பாயிட்டார்

அதில் கூறும் பொழுது எனக்கு குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும் நான் ஒரு 13 வயது சிறுமியாக இருந்தபோது கீழே ஐந்து வயது ஆறு வயது குழந்தைகள் நிறைய பேர் விளையாடுவார்கள். அவர்களுடன் சென்று நான் விளையாடுவேன் அவர்களெல்லாம் எதிர் வீட்டை சேர்ந்தவர்கள்.

அப்படி ஒரு முறை நான் அவர்களுடன் விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது கீழே ரூ.50 பணம் கிடந்தது. அந்த பணத்தை எடுத்து பார்த்த நான் முதலில் எடுத்துக் கொள்வோம் என்று நினைத்தேன் பிறகு அது எப்படியும் எதிர்வீட்டு ஆட்கள் உடையதாக இருக்கும் என்று கொடுத்துவிட்டேன்.

ஷகிலா கூறிய திடுக்கிடும் உண்மைகள்

பிறகு எனது தந்தையிடம் வந்து அதை நான் பெருமையாக கூறினேன் அதனை கேட்டு கோபமடைந்த எனது தந்தை இனி அவர்கள் வீட்டிற்கு செல்லாதே என்று கூறினார். ஏன் செல்லக்கூடாது என்று நான் கேட்ட பொழுது நாம் ஏழையாக இருக்கிறோம் எனவே நாம் திருடுவோமா என்று அவர்கள் உன்னை டெஸ்ட் செய்து இருக்கிறார்கள்.

எனவே இனி அவர்களது வீட்டிற்கு செல்லாதே என்று கூறினார் அதிலிருந்து தான் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நான் புரிந்து கொள்ள தொடங்கினேன் என்று கூறி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam