தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சுலக்சனா பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் வாழ்க்கையை அவரது மாமனார் MSV ஏற்றுக் கொள்ளாத விஷயத்தை மிகவும் பக்குவமாக கூறியிருக்கிறார்.
இதுவரை 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர் சுலக்சனா. இவர் 1980-ல் சுபோதையம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கு திரை உலகு ஃபேமஸான நடிகையாக மாறினார்.
எங்க காதலை MSV ஏத்துக்கல..
நடிகை சுலோசனா திரைப்படங்களில் உச்சகட்ட நட்சத்திரமாக இருக்கும் போதே இவர் எம் எஸ் விஸ்வநாதன் மகனை காதலித்து வந்திருக்கிறார். அப்படி காதலித்த சமயத்தில் இவரது காதலை இவரது பிறந்த வீட்டிலும் சரி அவரது கணவர் வீட்டிலும் சரி எதிர்க்கத்தான் செய்தார்கள்.
அப்படி இரு குடும்பத்தாரும் கடுமையான எதிர்ப்பை காட்டிய சமயத்தில் தான் அவர்கள் காதல் வலுப்பெற்றதாகவும், அதைத் தொடர்ந்து அவரை அதிகளவு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் தன்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று எந்த ஒரு தடையும் போடவில்லை. பெருந்தன்மையாக அது உன்னுடைய கேரியர் நீ நடிக்கலாம் என்றுதான் அவர் கூறியதாக நடிகை சுலக்சனா கூறியிருக்கிறார்.
கணவரை பிரிய காரணம் இது தான்..
தனித்தனியாக வாழ்ந்தாலும் எங்களுக்குள் எந்த ஒரு சண்டையோ மனக்கசப்போ ஏற்படவில்லை. மேலும் இன்று கூட அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லுவதும் அவர் எனக்கு அது போன்ற நாட்களில் வாழ்த்துக்களை சொல்லுவதும் நடந்த வண்ணம் தான் உள்ளது.
என்னை பொருத்தவரை காதல் என்பது ஒரு கத்திரிக்காய் என்று சிரித்த வண்ணம் கூறிய அவர் மேலும் காதல் என்பது ஒரு விதமான உணர்வு என்பதை விளக்கமாக சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து நடிகை சுலோச்சனா விவகாரத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்ன வென்றால் விவாகரத்து பெறக்கூடிய சூழ்நிலையில் தனது மூன்று மகன்களையும் அவரைப் பார்த்துக் கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அதற்காக எந்தவித ஜீவனாம்சமும் பெற விரும்பவில்லை.
எப்போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற குணத்தோடு இருக்கும் தன்மை எனக்கு இருப்பதால் தான் இன்று கூட யாரை பார்த்தாலும் என்னால் அழகாக சிரிக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் என் பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
போட்டு உடைத்த MSV மருமகள்..
அத்தோடு தனக்கு விவாகரத்து ஆகும் போது 23 வயது தான் இருந்தது. அந்த சமயத்தில் என் மனதில் தோன்றியதைத் தான் செய்தேன்.
இதை அடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து எனது குழந்தைகளின் படிப்பு செலவை மிகவும் சிறப்பான முறையில் செய்ய முடிந்தது.
இன்று எனது மூன்று மகன்களும் நல்ல நிலையில் இருப்பதாக அந்த பேட்டியில் மகிழ்ச்சியாக தெரிவித்து இருந்தார்.
மேலும் அப்பா கேரக்டரையும் நானே செய்ததால் எந்த ஒரு இடத்திலும் அப்பா இல்லை என்று என் குழந்தைகளுக்கு ஏக்கம் வராமல் பார்த்துக் கொண்டதாக சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
மீண்டும் திரைப்படங்களிலோ சீரியல்களிலோ நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து ஆரம்ப காலத்தில் மாபெரும் இசை கலைஞரான எம் எஸ் விஸ்வநாதன் தன் மகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத விஷயம் ரசிகர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.
அத்தோடு தன் காதல் கணவரை பிரிய இதுதான் காரணம் என்பதை என்பதை எம்.எஸ்.வியின் மருமகள் உடைத்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.