தமிழ் திரை உலகில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளின் ஒருவர் தான் நடிகை சுவலட்சுமி. இவரது குடும்பப் பாங்கான வட்டமான முகமும், மெல்லிய சிரிப்பும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கட்டி போட வைத்தது.
1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் மூன்று வயது சிறுமியாக இருக்கும் போதே சுரோ திர்த்த என்ற நடனப் பள்ளியில் கிராமிய நடனங்களை கட்டியிருக்கிறார்.
நடிகை சுவலட்சுமி..
பல்வேறு நடனங்களை கற்ற இவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது அற்புதமான நடன திறனை வெளிப்படுத்தியதை பார்த்த பிரபல இயக்குனர் சத்யஜித் ராய்க்கு பிடித்துப் போக உட்டோரன் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பினை கொடுத்தார்.
இந்த படத்தை எடுக்கும் போது இயக்குனர் சத்யஜித் இறந்து போக அவரது மகன் அந்த படத்தை இயக்க இந்த படம் தேசிய விருதை பெற்றது.
இதனை அடுத்து தமிழ் திரை உலகில் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டார்.
மேலும் ஆசை படத்தில் இடம் பிடித்த புல் வெளி புல்வெளி.. என்ற பாடலும் கொஞ்ச நாள் பொறு தலைவா.. மீனம்மா.. அதிகாலை.. போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டு அடித்ததால் சுவலட்சுமியை அனைவரும் விரும்பினார்கள்.
மேலும் இந்த படம் அஜித்தின் திரை உலகை வார்த்தைக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு தேசிய விருதையும் பெற்றது.
யாரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..
1996-இல் அகத்தியன் இயக்கிய கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்த இவர் 1997-ஆம் ஆண்டு காத்திருந்த காதல் என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
மேலும் அதே ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளி வந்த லவ் டுடே திரைப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற யாரும் எதிர்பாராத ஆன்ட்டி ஹீரோயினி சப்ஜெக்ட்டில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் 1998-இல் நிலாவே வா என்ற படத்தில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று விஜய்யுடன் இணைந்து நடித்தார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த இனியவளே, நீ வருவாய் என, ஹவுஸ்புல், சுயம்வரம் போன்ற படங்களில் விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
திரைத் துறையில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்கவைத்து இருந்த சுவலட்சுமி ஏராளமான ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை பெற்றவர். நடிகைகளை தன் வாயால் சீண்டி வரும் பயில்வான் ரங்கநாதன் சுபலட்சுமி பற்றி சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதில் தமிழ் நடிகைகள் எல்லோரும் சினிமாக்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்தார்கள். அதனால் தான் மும்பையில் இருந்து தமிழுக்கு பல கவர்ச்சி நடிகைகளை இறக்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் நதியாவிற்குப் பிறகு படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்தவர் சுவலட்சுமி மட்டுமே. தமிழில் மொத்தம் பதிமூன்று படங்களில் நடித்திருக்க கூடிய இவரின் படங்களில் ஏழு படங்கள் வெள்ளிவிழா படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் அதிகளவு புடவையிலேயே நடித்த நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய சுபலட்சுமிக்கு கமலஹாசனுடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்துவிட்டார்.
சினிமாக்களில் நடிக்கும் போது பீக்கில் இருந்து சுபலட்சுமிக்கு காதல் வலை வீசிய நடிகர்கள் பலர் உண்டு. எனினும் அவர்கள் வலையில் சிக்காக ஒரே நடிகை சுவலட்சுமி தான். அது போல அதிகளவு கிசுகிசுகளில் சிக்காத நடிகையாக உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் எக்காரணம் கொண்டும் கவர்ச்சி காட்டி நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த சுபலட்சுமி ரஜினி, கமல் போன்ற உச்சகட்ட நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் தன்னை கட்டாயம் கவர்ச்சி காட்டி நடிக்க வைத்து விடுவார்கள் என்று அவர்களது படங்களையும் தவிர்த்து விட்டார்.