பொதுவாக திரையுலகை பொருத்த வரை தற்போது அட்ஜஸ்ட்மென்ட் எப்படி பேசும் பொருளாகியுள்ளதோ அதுபோல நடிகர் மற்றும் நடிகைகள் போதை வஸ்துக்களை பயன்படுத்தி வருவது வெட்ட வெளிச்சமாக வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் தற்போது போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் மலையாள நடிகையான பிரயகா ரோஸ் மார்ட்டின் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளி வந்து இணையத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தாதாவோடு தொடர்பு..
மலையாளத் திரைப்படத்தில் பணி புரியக்கூடிய இவர் 2009இல் சாகர் அலியாஸ் ஜாக்கி ரீலோடட் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பிசாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
மேலும் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அரசியல் தில்லர் திரைப்படமான இராம லீலாவில் திலீப்புக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்த பின்னர் கன்னட படத்தில் அறிமுகமாகி அங்கும் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு அதிகளவு திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இவரைப் பற்றி பரபரப்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அது தான் திருவனந்தபுரத்தில் பிரபல தாதாவாக இருக்கும் ஒருவர் அளித்த போதை விருந்தில் கலந்துகொண்டு சிக்கலில் தற்போது மாட்டியிருப்பதாக செய்திகள் இணையம் முழுவதும் பரவியுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய ஜீவா பட நடிகை..
இந்த தாதா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உள்ள நிலையில் இவரது பெயர் ஓம் பிரகாஷ் என தெரிய வந்துள்ளது. இவர் மேல் ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடத்துவதாக போதை பார்ட்டி நடத்துவதாக தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து கொச்சி போதை பொருள் தடுப்பு அமைப்புக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த ஹோட்டலில் அதிரடி சோதனை செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் அந்த ஹோட்டலில் இருந்த தாதா ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். இதில் போதைப்பொருட்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளது.
மேலும் இந்த சமயத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி மற்றும் பிரயகா மார்ட்டின் போன்ற பிரபல நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து இவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த பிரபலங்கள் மற்றும் தாதா அவரது கூட்டாளிகளை போலீசார் தனது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் உரிமை கேட்டு இருக்கிறார்கள்.
எனினும் அங்கு போதை பார்ட்டி நடந்ததற்கான எந்த ஒரு சாட்சியும் இல்லாத நிலையில் கைது செய்த அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
எனினும் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரயகா மார்டின் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இடம் விசாரணை செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.