அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட அதிதிபாலன் தன்னுடைய திறமையை பக்குவமாக படத்தில் வெளிப்படுத்தியதின் மூலம் மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.
அருவி படத்தில் அதிக மேக்கப் இல்லாமல் சிம்பிளான தோற்றத்தில் அழுத்தமான கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்திய இவருக்கு, இந்தப் படத்துக்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரும் அதிதிபாலன் ஆரம்ப நாட்களில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரை செய்திருந்தார்.
அதனை அடுத்த தான் அருவி பட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விமர்சகர் விருதை பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து குட்டிக்கதை, குளிர், வழக்கு, படவேட்டு, சாகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டர் ரோல்கள் அமையவில்லை. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் ஒரு குறிப்பிட்ட ரோலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு உங்களுக்கு விருந்தாகும்.
மேலும் தற்போது இந்த படத்தின் பிரமோசனுக்காக பேட்டிகளை கொடுத்து வரும் அதிதிபாலன் சமீபத்தில் தனது பேட்டியில் காதல் பற்றிய காரசாரமான கருத்துக்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இவருக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதல் ஏற்பட்டு உள்ளது என்றும், ஆனால் அந்த காதல் இரண்டு மாதத்திலேயே பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூசாமல் பேசி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல பேரை காதலித்து உள்ளேன் என்று கூறிய அதிதிபாலன் பலருடன் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததோடு, பிரேக்கப் என்பது எல்லோர் வாழ்க்கைகளும் நடக்கக்கூடிய விஷயம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மேலும் கேட்கப்பட்ட கேள்விகளை தொடர்ந்து ஏன் பிரேக்கப் செய்தீர்கள் என்ற கேள்விக்கு காதலிப்பவர்கள், ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்யக்கூடாது. ரிலேஷன்ஷிப்பில் ஒருத்தருக்கு பிடித்தது போல் மற்றொருவருக்கு பிடித்திருக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் இருக்கக் கூடாது எனக் கூறினார்.
காதல் மட்டும் ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட டார்ச்சர் தான் பிரேக்கப் ஆனதற்கு காரணம் என்பதை அவர் ஓப்பனாக தெரிவித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது