ஜெயிலர் 2வுக்கு அடுத்து பேன் இந்தியா படம்.. பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் நெல்சன்.. ஹீரோ யார் தெரியுமா?

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் திரைப்படமே இயக்குனர் நெல்சனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நெல்சனுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

இந்த நிலையில் அடுத்த நெல்சன் இயக்கிய திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அவருக்கு பெரும் ஹிட் கொடுத்தது.

பேன் இந்தியா படம்

அதனை தொடர்ந்து பிளாக் ஹியூமர் என்கிற புது காமெடி தமிழ் சினிமாவில் நெல்சனின் மூலமாக அறிமுகமானது. தொடர்ந்து அவரது அனைத்து திரைப்படங்களிலும் இந்த பிளாக் ஹியூமர் என்கிற நகைச்சுவையை பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் நெல்சனுக்கு அடுத்த ஒரு முக்கிய படமாக அமைந்தது.  இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக வசூல்  கொடுத்த படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது.

பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் நெல்சன்

இதனை தொடர்ந்து நெல்சன் அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு இருக்கிறார். தற்சமயம் வேட்டையன் திரைப்படம் முடிந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஹீரோ யார் தெரியுமா?

எனவே ஜெயிலர் 2 திரைப்படத்தின் திரைக்கதை வேலைகளில் ஏற்கனவே நெல்சன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் அடுத்து ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் போலவே பிளாக் ஹியூமர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெல்சனுக்கு இந்த வாய்ப்பை இசையமைப்பாளர் அனிருத்தான் பெற்று கொடுத்தார் என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

ஏனெனில் ஜூனியர் என்.டி.ஆர்ஐ அவ்வளவாக நகைச்சுவை நடிகராக யாரும் பார்த்ததில்லை இந்த திரைப்படத்தில் அப்படி இருப்பார் என்பதாலேயே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரங்களில் இந்த பாடம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Check Also

தலைக்கேறிய போதையில் காருக்குள் அது நடந்திருச்சு.. டாப் ஹீரோயின் பற்றி கொளுத்தி போட்ட பாடகர்!!

போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப …