உன்னை மொத்தம் நேசிக்கிறேன்…. பிடித்த இடத்திற்கு அஜித்தை அழைத்துச்சென்ற ஷாலினி – வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாகவும் பிரபலமான காதல் ஜோடியாகவும் பார்க்கப்படுபவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி.

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

அஜித் -ஷாலினி:

பல காதல் ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டான மிகச்சிறந்த காதல் ஜோடியாக தற்போது வரை இவர்கள் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

அமர்க்களம் திரைப்படத்தில் அஜித் ஷாலினியுடன் நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் .

இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாலினி திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி விட்டார்.

அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார் .

தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறா.ர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தனக்கு மிகவும் இஷ்டமான விருப்பப்பட்ட விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் .

அந்த வகையில் கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் அஜித் தன்னுடைய ஈடுபாட்டை அதிக அளவில் வெளிப்படுத்துவார் .

அஜித் மீது அளவுகடந்த காதல்…

இதனிடையே நடிகை ஷாலினி தனது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அப்போது அஜத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்கள் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பார்.

அஜித் சமூக வலைதளங்களுக்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் கூட ஷாலினி தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக்கான வீடியோ,புகைப்படங்கள், அன்பான பதிவுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

அஜித்தின் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றம் இரக்கம் படதோல்விகள் விபத்துக்கள் மரணத்தை நோக்கிய கொடுமையான விபத்துக்கள், பல அறுவை சிகிச்சைகள், பல தோல்விகள் , சறுக்கல்கள் இருந்தாலும் ஷாலினி எப்போதும் மிகச்சிறந்த மனைவி
யாகவே அவருடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்.

அந்த அளவில் தற்போது நடிகை ஷாலினி தனது காதல் கணவரான அஜித்துடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு ஜாலியாக ரொமான்டிக் அவுட்டிங் சென்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

வெளிநாட்டில் அஜித்தின் கை பிடித்துக்கொண்டு:

அந்த Instagram பதிவில் “Together is your wonderful place to be” எனக்கு கேப்ஷன் கொடுத்து ஹார்ட்டினோட வெளியிட்டு இருக்கிறார் ஷாலினி .

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதில் ஷாலினி அஜித்தின் கைகளை கோர்த்தபடி ஜாலியாக வாக்கிங் செல்கிறார்.

இந்த ரொமான்டிக் வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் சூப்பர் ஜோடி கடைசிவரை காதலித்துக் கொண்டே இருங்கள்.

இதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பதிவிடாதீர்கள்… ஏனென்றால் சமீப நாட்களாக சமீப நாட்களாக மிகச்சிறந்த காதல் ஜோடியாக இருந்த பலபேர் தொடர்ந்து விவாகரத்தை அறிவித்து வருகிறார்கள் .

அதுவே எங்களுக்கு மனதிற்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே யார் கண்ணும் பட்டுவிடாமல் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

இதுபோன்று சமூக வலைதளங்களில் உங்களுடைய வீடியோக்களை வெளியிட வேண்டாம் என ஷாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version