வாழ்க்கை கொடுத்தவர் அவர்.. கண்ணீர் விட்டு அழுத யுவனுக்கு கரம் நீட்டிய அஜித்.. இந்த சம்பவம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழில் நல்ல கலெக்ஷன் கொடுக்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

ஆனால் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சொந்த வாழ்க்கையின் காரணமாக அஜித்தை பிடித்தவர்கள் நிறைய பேர் உண்டு. அஜித் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய நபர்களுக்கு நன்மை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கை கொடுத்தவர் அவர்

இதனாலேயே அஜித்துக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அஜித்தும் மற்ற நடிகர்கள் போல ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக மெனக்கெட்டு எதுவும் செய்வது கிடையாது. இருந்தாலும் ரசிகர்கள் அதிகரிக்கிறார்களே தவிர குறைவதில்லை.

அதற்கு காரணம் சொந்த வாழ்க்கையில் அஜித்தின் செயல்கள்தான் சொந்த வாழ்கையில் அஜித் மிகவும் நல்லவர் என்று கூறப்படுகிறது. வேறு பல கலைகள் மீதும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அஜித். இந்த நிலையில் அஜித் தனக்கு செய்த உதவி குறித்து யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

கண்ணீர் விட்டு அழுத யுவன்

ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான பொழுது யுவன் சங்கர் ராஜாவிற்கு அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் இசையமைக்கும் திரைப்படங்கள் மட்டும் தோல்வியை காண துவங்கின.

இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு யுவன் சங்கர் ராஜாவிற்கு வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த அஜித் பிறகு அவரை அழைத்து உங்களுக்கு நான் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தீனா திரைப்படத்தில் வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார்.

கரம் நீட்டிய அஜித்

தீனா திரைப்படம் பெரிய வெற்றியை அடைவதற்கு அந்த படத்தின் பாடலும் ஒரு வகையில் காரணமாக இருந்தது. அந்த அளவிற்கு அஜித்திற்கு கைமாறாக சிறப்பான பாடல்களை கொடுத்தார் யுவன் சங்கர் ராஜா. அதற்குப் பிறகு அஜித் படங்களுக்கு இசையமைக்கும் போது மட்டும் யுவன் சங்கர் ராஜா சிறப்பான இசையை வெளிப்படுத்துவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் அந்த மூன்று வருடங்கள் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு கரம் நீட்டியவர் அஜித் தான் என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version