Site icon Tamizhakam

இணையத்தில் தீயாய் பரவும் மோசமான புகைப்படங்கள்.. இசைவாணி செய்த வேலையை பாருங்க..!

In a surprising turn of events, popular singer Isaivani has taken a stand against a gang that’s been spreading some seriously defamatory news about her.

நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் பிரபல கானா பாடகி இசைமானி பாடிய ஐ அம் சாரி ஐயப்பா பாடல் ஐயப்பன் பக்தர்களையும் இந்து மத சடங்குகளையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இருப்பதாக கூறி இசைவாணிக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இசைவாணி தன்னை பற்றியும் தன்னுடைய சாதி பற்றியும் சில அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கானா பாடகி இசைவாணி ஐயப்பன் குறித்தும் அவர்கள் மேற்கொள்ளும் விரதங்களை கற்றுக் கொடுக்கும் விதமாகவும் ஐ அம் சாரி ஐயப்பா என்று தொடங்கக்கூடிய ஒரு பாடலை பாடி பெருவாரியான மக்களின் மனதை நோகடித்தார்.

இதனை தொடர்ந்து இசைவாணி மீதும் இயக்குனர் பா ரஞ்சித் மீதும் கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்து மத சடங்குகள் மற்றும் வழிகாட்டு முறைகளையும் கொச்சைப் பாடல் பாடிய இசைவாணி மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு செல்வது குறித்து விளக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட கூடாது என்று தீர்ப்பளித்தது.

அந்த நேரத்தில் தான் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்ற இசை குழு உருவானது. அப்போது ஐ அம் சாரி ஐயப்பா பாடல் என்ற பாடலும் உருவானது. அப்போது முதல் இந்த பாடல் பாடப்பட்டிருக்கிறது.

இது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடல் கிடையாது. பெண்களின் உரிமையை கேட்கும் பாடல் என விளக்கம் அளித்து இருந்தனர். இந்நிலையில் பாடகி இசைவாணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்து இருக்கிறார்.

அதில் கலந்து 2019 ஆம் ஆண்டு நான் பாடிய ஐ அம் சாரி ஐயப்பா பாடல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இரண்டு நாட்களாக பல தொலைபேசி எண்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.

என் புகைப்படங்களை மோசமான முறையில் சித்தரித்து மார்ஃபிங் செய்து சில விஷமிகள் பரப்பி உள்ளனர். ஐ அம் சாரி ஐயப்பா பாடல் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் திட்டமிட்டு வந்த செயல் செய்து வருகின்றனர்.

இசைவாணியின் புகாரின் பேரில் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் உலக பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு இருக்கின்றனர்.

Summary in English : Gana singer Isaivani has recently taken a stand against a gang that’s been spreading some seriously defamatory news about her. It’s not uncommon in the music industry for rumors to fly, but Isaivani decided enough was enough and filed a complaint to put an end to the drama.

Exit mobile version