நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதுமே இது இருக்கும் என்று ஒரு பொருளை எடுத்துக்காட்டினார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். என்ன காரணம்..? அப்படி என்ன பொருளை எடுத்து காட்டினார் என்பது பற்றிய சுவாரசியமான பதிவுதான் இது.
நடிகை அனிகா சுரேந்திரன் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி.. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு மகள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானார்.
குறிப்பாக தமிழில் நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது ஹீரோயினாக வளர்ந்திருக்கும் அனிகா சுரேந்திரன் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்பது பிம்பத்தை உடைப்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகள், லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இது குறித்த அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது.. என் மேல் இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் என்னுடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால், இதற்கு முன்பு பல நடிகைகள் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தின் காரணமாக சினிமாவில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடிக்கும் திறமை இருந்தும் அவர்கள் மீது இருந்த அந்த பிம்பம் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது.
அப்படி என்னுடைய சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறியாக நான் விடமாட்டேன். நான் இன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது என்று கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருக்கக்கூடிய சமாச்சாரங்கள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வைத்திருந்தது ஒரு குட்டியான ஹேண்ட் பேக் தான். அதில் பெரிய சைஸ் ஒரு வாசனை திரவிய பாட்டிலை வைத்திருந்தார் அனிகா சுரேந்திரன்.
இதனை எடுத்துக்காட்டி இது எப்போதுமே என்னுடைய ஹேண்ட் பேக்கில் இருக்கும் என்று கூறினார். பொதுவாக ஹேண்ட் பேக்கில் சிறிய அளவிலான வாசனை திரவிய குப்பிகளை மட்டுமே வைத்திருப்பார்கள்.
ஆனால், நடிகை அனிகா சுரேந்திரன் ஒரு பெரிய பாட்டிலேயே வைத்திருக்கிறார். இதனுடைய விலை என்று என்ன என்று விசாரித்த போது இந்திய மதிப்பில் 20,000 ரூபாய் வருகிறது.