நடிகர் விஜய் சினிமாவை ஓரம் கட்டி வைத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவருடைய கடைசி திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கதை சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தளபதி 69 திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹெச் வினோத் இயக்கிக் கொண்டிருக்கிறார். கே வி என் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த படம் துவங்கிய நேரத்தில் இருந்து தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பகவந் கேசரி படத்தில் இடம்பெற்ற சில நிமிட காட்சிகளை அப்படியே தளபதி 69 படத்தில் வைப்பதற்காக படமாக்கியதாகவும், இதற்காக அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை தளபதி 69 படக்குழு வாங்கி இருக்கிறது என்ற தகவலும் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் பகவந் கேசரி திரைப்படத்தை 5 முறை பார்த்திருக்கிறார். அதன் பிறகு அந்த படத்தின் இயக்குனரான அனில் ரவிபுடியை அழைத்து தன்னுடைய கடைசி படத்தை அனில் ரவிபுடி ரீமேக் செய்து இயக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், நான் ரீமேக் படத்தை நான் இயக்க மாட்டேன் என விஜயின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் அனில் ரவிபுடி நிராகரித்திருக்கிறார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய இயக்குனர் அனில் ரவிபுடி விஜய் சாரின் கடைசி படம் பகவத் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த நிகழ்ச்சியில் பேசுவது சரியானதும் இல்லை.
விஜய் சார் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. மதிப்பு இருக்கிறது. இந்த படத்தை இயக்க முடியாமல் போனதற்கு நேரம் தான் காரணமே தவிர கடைசி படத்தை நான் இயக்க மாட்டேன் என்று மறுத்ததாக கூறுவதில் அர்த்தம் இல்லை.
நடந்தது வேறு. ஆனால், நான் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என்பது போல தகவல்கள் வெளியாகின்றன. அது தவறு. தளபதி 69 திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியிருக்கிறார்.