நடிகை அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக அறியப்படும் ஒருவர் இவரைப் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இவர் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படக்கூடிய ஒரு தகவலைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த தகவல் அனைவரையும் சுவாரசியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஆம் இவர் இன்ஸ்டாகிராமில் இரண்டே இரண்டு ஹீரோக்களை மட்டும் தான் பின் தொடர்கிறார். ஆனால், அதில் பிரபாஸ் இல்லை. அந்த இரண்டு ஹீரோக்கள் யார்..? என்ற விவாதம் தான் இணையத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
டோலிவுட்டியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா தமிழிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அனுஷ்கா தன்னுடைய முதல் படத்திலேயே தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் அனுஷ்காவிற்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து ஹீரோயின் சென்று படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 11 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். அதில் இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டுமே.
ஆனால் இந்த இரண்டு நடிகர்களிலும் அனுஷ்கா காதலிக்கிறார் என்ற கிசு கிசுக்கப்பட்ட நடிகர் பிரபாஸ் இல்லை என்பதுதான் ட்விஸ்ட். அனுஷ்காவும் பிரபாஸும் காதலிப்பதாக ஒரு காலத்தில் தகவல்க வெளியானது.
இருவரும் அதனை மறுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டனர். இது பிரபாஸ் ரசிகர்களுக்கும் அனுஷ்கா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.
ஏனென்றால் பாகுபலி திரைப்படத்தில் இருவருடைய ஜோடியும் அந்த அளவுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.
சரி அப்படி நடிகை அனுஷ்கா யாரைத்தான் பின் தொடர்கிறார் என்று பார்த்தால் இரண்டே இரண்டு ஹீரோக்கள் தான் அதில் ஒருவர் நடிகர் ராணா டகுபதி பாகுபலி படத்தின் வில்லன். மற்றொருவர் நடிகர் துல்கர் சல்மான்.
அனுஷ்காவை பின் தொடரக்கூடியவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி இருக்கிறது. பல்வேறு பிரபலங்கள் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென நடிகை அனுஷ்கா பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து 12-ஆக உயர்ந்துள்ளது.
அந்த ஒருவர் யார் என்று தெரியுமா..? ஆம், நடிகர் பிரபாஸ் தான். இணைய பக்கங்களில் பிரபாசை அனுஷ்கா பின்தொடர்வதில்லை என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் திடீரென அவரை பின்தொடர்ந்துள்ளார் அனுஷ்கா.
தற்போது வரை 48 படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இவருக்கு திருமணம் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.