ஆஸ்கார் நாயகன் AR Rahman தன்னுடைய மனைவி சாய்ரா பானு அவர்களை விவாகரத்து செய்து இருக்கிறார்.
இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இவர்களுடைய திருமணம் குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
திருமணம் முடித்த அடுத்த நாள் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்து ஏ ஆர் ரகுமான் பேசியிருக்கிறார்.
அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது ,எனக்கான பெண்ணை நான் தேர்வு செய்வதற்கு எனக்கு போதுமான நேரம் இல்லை.
எனக்கான பெண்ணை தேர்வு செய்தது என்னுடைய அம்மா தான். திருமணம் செய்து கொள்ளக் கூடிய யோசனையே என்னிடம் இல்லை.
நான் புதிய புதிய படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னுடைய அம்மாவிடம் என்னுடைய வாழ்க்கைக்கு ஏற்றார் போல எனக்கு உதவியாக இருக்க கூடிய எளிமையான ஒரு பெண்ணை தேர்வு செய்யுமாறு கூறியிருந்தேன்.
குறிப்பாக இசையில் யாருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அவரை எனக்கு மணமகளாக தேர்வு செய்ய கேட்டிருந்தேன் என பேசி இருக்கிறார்.
தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ ஆர் ரகுமானுக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் அமீன் ரஹ்மான் என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary in English : Recently, AR Rahman made headlines not just for his incredible music but also for a heartfelt speech about his marriage that went viral right after he announced his divorce from Saira Banu. In the speech, he reflected on love, partnership, and the journey they shared together. Fans and followers were touched by his honesty and vulnerability as he spoke about the ups and downs of their relationship.
Privacy Request :
Both AR Rahman and Saira Banu have recently opened up about wanting some privacy as they navigate a personal situation. It’s totally understandable—everyone deserves a little space, especially when dealing with something close to the heart. In their statement, they kindly asked the public and media to respect their need for solitude during this time.