பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் 90ஸ் கிட்ஸ் களின் மிகவும் விருப்பமான தொகுபாளினியாக வலம் வந்தவர்.
குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகர் சிட்டிபாபு உடன் சேர்ந்து இவர் சொல்லக்கூடிய வணக்கத்தின் ஸ்டைலை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அர்ச்சனா. இடையில் சில காலம் ஆள் எங்கே இருக்கிறார் என்றே காணாமல் போனார். சமீப காலமாக மீண்டும் சின்னத்திரையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இடையில் சில சர்ச்சைகளிலும் சிக்கினார் அர்ச்சனா. ஆனாலும், இவருக்கென இருக்கும் ரசிகர் பட்டாலும் அப்படியே தான் இருக்கிறது.
குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை என்ற நிகழ்ச்சியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி.
இந்நிலையில், இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் நடிகை அர்ச்சனா.
அவர் கூறியதாவது, இந்த இளமை புதுமை ஷூட்டிங் நடக்கும்போது நான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்தேன். எனக்கு நினைவு இருக்கிறது, அந்த சேனல் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. மிகவும் சௌகரியமான இடத்தை கொடுத்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டாது.
என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் இருந்து ஒருவர் இந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார். அதனை இங்கே பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. 17 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் என்று கூறியிருக்கிறார்.
இவருடைய இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
Summary in English : Anchor Archana recently took a stroll down memory lane, reminiscing about her time on the old TV show “Ilamai Pudhumai.” It’s hard to believe it’s been so long! She shared some heartwarming stories about how the channel really went above and beyond to pamper her during her pregnancy. Imagine being nine months pregnant and still rocking the stage!