பொண்டாட்டி புள்ளையை நாசம் பண்ணிட்டு.. வெளியேறிய பெண் போட்டியாளருக்காக அர்னாவ் செய்யும் அலும்பு..!

சன் டிவியின் செவ்வந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற சீரியலில் நடித்த நடிகர் அர்னாவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைத்யா உண்மையான பெயர் முகமது அம்ஜத் கான் என்பதாகும். திருமணத்திற்கு பிறகு திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் நடிகர் அர்னாவ். வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் அதைப்பற்றி கேட்டால் தன்னை தாக்குகிறார் என்று புகார் கூறியிருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

அர்னாவ் தொடர்பில் இருந்த அந்த வேறொரு பெண் வேறு யாரும் கிடையாது. தற்போது அவருடன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதா தான்.

கர்ப்பமாக இருந்த பொழுது தன்னுடைய மனைவியை தவிக்க விட்டு வந்த நடிகர் அர்னாவ். தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை பார்க்க இதுவரை அவர் சென்றதில்லை.

சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு ஒரு வயது பூர்த்தி அடைந்த வீடியோவை வெளியிட்டு ஒவ்வொரு சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடுங்கள். குழந்தைகள் வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்.. அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் கொண்டாட வேண்டும் என நடிகை திவ்யா ஸ்ரீதர் உருக்கமாக பதிவிட்டு இருந்தது ரசிகர்களை நெஞ்சை கணக்க செய்தது.

குடும்பம் என்றால் 1008 பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். யார் வீட்டில் தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று திவ்யாவுக்க பலரும் ஆறுதல் கருத்துக்களை கூறி வந்தனர்.

ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை பார்த்த ரசிகர்கள் சரியான மண்டை குடைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகர் அர்னாவ் முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இளம் நடிகை சாஞ்சனா நமிதாஸ் குறித்து அவர் வெளியேற்றப்பட்டது குறித்தும் ஒப்பாரி வைத்து வருகிறார்.

எத்தனையோ போட்டியாளர்கள் இருந்தும் அவர்கள் இதனை கடந்து சென்று விட்டனர். ஆனால், நடிகர் அர்னாவ் நான் ஒரு நடிகர் என்பதை பிக் பாஸ் வீட்டில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

வெறும் ஒருநாள் ஒரே ஒரு நாள் பார்த்த ஒரு பெண்ணுக்காக இப்படி ஒப்பாரி வைக்கும் அர்னாவ். தன்னை நம்பி வந்த தனக்கு ஒரு குழந்தையும் பெற்றுக் கொடுத்த நடிகை திவ்யாவை அம்போ என நடுரோட்டில் நிறுத்திவிட்டு தனக்கு பிறந்த குழந்தையை தற்போது வரை நேரில் சென்று பார்க்காத ஒரு கல்நெஞ்சம் கொண்ட அர்னாவ் போட்டியாளர் ஒருவர் ஒரே நாளில் வெளியேறிவிட்டார் என்ற துக்கம் தாலாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

இது எல்லாம் பார்க்கும் பொழுது இது எப்படியான உலகம்..? எப்படி இப்படியான மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்தில் நிலைக்கிறார்கள்..? என கேட்கத் தோன்றுகிறது. என்பதில் ஆரம்பித்து, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வரை நடிகர் அர்னாவ்வை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version