When you hear about a baby actress refusing to attend movie shoots that last more than two hours, it definitely raises some eyebrows!
ஒரு காலத்தில் பேபி நடிகை டபுள் ஷிப்ட் போட்டு படங்களில் நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்னுடைய உயிர் மூச்சு எல்லாமே என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் பேபி நடிகை.
ஆனால், சமீப காலமாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடிக்க முடியாது என்று கண்டிஷன் போட்டு வருகிறாராம். இதனால் இவருக்கு புதிய பட வாய்ப்புகளே கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியான கிசுகிசுக்கள் பூதாகரமாக கிளம்பி இருக்கின்றன.
8 மணி நேரத்திற்கு குறைவாக நடிக்கக்கூடிய நடிகர்களை படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது. குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் தயாராக இருக்க வேண்டும்.
அப்படி கால் சீட் கொடுக்கும் நடிகர்கள் நடிகைகளை மட்டும் படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் விதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் நடிகைகள் செய்யக்கூடிய தாமதம் ஒட்டுமொத்த படத்தின் பட்ஜெட்டை தேவையே இல்லாமல் உயர்த்துகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டு விமானத்தில் பறப்பதற்கு மட்டும் ஐந்து மணி நேரம் 6 மணி நேரம் என ஒரு நாளைக்கு ஒதுக்குகிறார்கள் நடிகர் நடிகைகள்.
சென்னையில் 2 மணி நேரம் சூட்டிங்.. அது முடிந்த பிறகு மும்பையில் 2 மணி நேரம் சூட்டிங்.. என வெவ்வேறு படங்களில் ஒப்பந்தமாகும் நடிகர் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் போட்டுக் கொண்டிருக்கும் இந்த சட்டம் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
எட்டு மணி நேரம் நடித்தால் ஒரே நாளில் பெருவாரியான படப்பிடிப்பை முடித்து விட முடியும். ஆனால், இரண்டு மணி நேரம் மட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதால் படத்தின் பட்ஜெட் நான்கு நாட்களுக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.
விளம்பர படங்களில் நடித்து கணிசமான வருவாய் பார்த்த அந்த நடிகை விளம்பர படங்கள் போலவே இரண்டு மணி நேரத்தில் படங்களிலும் நடித்துவிடலாம் என்று அதே யுக்தியை பின் தொடர முயற்சி செய்து தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கிருக்கிறார்.
இந்த நடிகையை படத்தில் ஒப்பந்தம் செய்தால் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக எகிறும் என்பதால் பட தயாரிப்பாளர்கள் இந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள்.
இயக்குனர்களும் நடிகையின் பெயரை கேட்டாலே கம்பி நீட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நடிகையால் அதிக நேரம் கேமரா வெளிச்சத்திற்கு முன்பு நின்று கொண்டு பணியாற்ற முடியவில்லை என்பதுதான்.
அவருடைய சருமம் கேமரா வெளிச்சத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றும் சிறிய இடைவெளிக்கு பிறகு நன்கு ஓய்வெடுத்து விட்டு வந்து பணியை தொடலாம் தொடரலாம் என்று யோசித்து வைத்திருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த நடிகை மீண்டும் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்திருக்கிறார். ஆனால், தற்போதும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவருடைய சருமம் ஒத்துழைப்பு தர மறுக்கிறது.
இதனால் தான் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படங்களில் நடிக்க முடியாது என்ற சூழலில் சிக்கியிருக்கிறார் நடிகை என்று கூறுகிறார்கள்.
Summary in English : In a surprising turn of events, a baby actress has made headlines by refusing to attend movie shoots that last more than two hours! Yep, you heard that right.