70 வயதை கடந்த பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னமும் வரவேற்பை பெற்று வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் என்பதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல ரஜினிக்கான சம்பளமும் அதிகரித்து வருகின்றன 70 வயதில் எந்த ஒரு நடிகரும் தொடர்ந்து கதாநாயகனாக இதுவரை நடித்ததில்லை.
அப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவில் முதன்முறையாக இன்னமும் கதாநாயகனாக நடித்து வரலாறு படைத்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு இருந்த சிவாஜி மாதிரியான நடிகர்கள் கூட துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தனர்.
73 வயசுல பண்ண கூடாததை பண்ணி
இந்த நிலையில் தொடர்ந்து ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் வருகிற பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. மேலும் ரஜினி ரசிகர்கள் இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்கள்.
சூப்பர் ஸ்டார்
ரஜினிக்கு அடி வயிற்றில் வலியும் மற்றும் மார்பில் வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் நேற்று 11 மணி அளவில் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றது.
தற்சமயம் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறது மருத்துவமனை இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏன் ரஜினிகாந்த்க்கு திடீரென்று இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டது என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது.
உடல் நல பிரச்சனைக்கு இதுதான் காரணமா?
ஏற்கனவே ரஜினிகாந்துக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே சினிமா வட்டாரத்தினர் சிலர் கூறும் கூறும்பொழுது கூலி திரைப்படத்தில் மிகவும் கடினமான சண்டை காட்சிகள் சில வைக்கப்பட்டிருந்தன.
அந்த காட்சிகளை ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். அதனால்தான் அவருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டன என்று கூறுகின்றனர். பொதுவாக லோகேஷ் கனகராஜ் பெரும் நடிகர்களுக்கு சண்டை காட்சிகள் வைக்கும் பொழுது அவர்களது வயதை கணக்கில் கொண்டு கடினமான சண்டை காட்சிகளை கொடுப்பது கிடையாது.
விக்ரம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுக்கு கடினமான சண்டை காட்சிகளை வைக்கவில்லை. அந்த மாதிரியான சண்டை காட்சிகள் வந்த பொழுது அதற்கு டூப் போட்டு தான் அந்த காட்சியை எடுத்திருந்தார். எனவே இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.