” வேண்டாம் என தூரப் போடும் பப்பாளி விதை..!” – அதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

பப்பாளி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதோடு கண்ணுக்கு அதிக அளவு பார்வை திறனை கொடுக்க கூடிய பழம் என்பது அனைவருக்கும் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழத்தை உண்பதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

 எனினும் இந்த பப்பாளியில் இருக்கும் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நாங்கள் கூறினால் உங்களுக்கு அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இது உண்மைதான், பப்பாளியில் இருப்பது போலவே அதன் விதைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அது என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி விதை செய்யும் நன்மைகள்

பப்பாளி விதையில் ஒலிக் அமிலம் மற்றும் மோனோ சேச்சரேட் கொழுப்பு அமிலங்கள் அதிகளவு உள்ளது இவை இரண்டுமே உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு உறுதுணையாக இருந்து கெட்ட கொழுப்பை குறைப்பதன் மூலம் உடல் எடை விரைவாக குறையும்.

இந்த விதைகளில் இருக்கக்கூடிய கரோட்டின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்க உதவி செய்கிறது. அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் கோளாறுகளை நீக்குவதோடு மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற வலியை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

மேலும் இந்த விதைகள் அழகுக் கலையில் சருமத்தின் ஈரப்பதத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்க கூடியது. இதன் மூலம் வயது முதிர்ச்சியால் ஏற்படுகின்ற முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலையில் நன்கு தேய்த்து விட்டு வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் தலைக்கு குளிப்பதன் மூலம் உங்கள் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

மேலும் இந்த பப்பாளி விதையானது பூஞ்சை, பாரசைடுகள், ஈஸ்ட் போன்ற நுண்கிருமி தொற்றுதல்களில் இருந்து நம்மை காக்கும் சக்தி படைத்தது.

இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பப்பாளி விதைகளை பெண்கள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

மேற்கூறிய நன்மைகள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பதால் இனிமேல் உங்கள் பப்பாளி பழத்தில் இருக்கும் விதைகளை தூரப் போடாமல் பக்குவமாக எப்படி பயன்படுத்துவது என்பது புரிந்துள்ளதால் நீங்கள் கண்டிப்பாக பப்பாளி விதைகளை பயன்படுத்துவீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam