“டே.. சொட்ட.. டீ வாங்கிட்டு வாடா..” செந்தில் குறித்து நடிகர் பாக்யராஜ்..! ரசிகர்கள் கண்ணீர்..!

நடிகர் பாக்யராஜ் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற பெயரை தனதாக்கியவர். தற்போது வரை பாக்கியராஜ் அளவுக்கு திரைக்கதை எழுதுவதற்கு பல இயக்குனர்கள் தடுமாறுகிறார்கள்.

பல இயக்குனர்கள் தங்களுடைய திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா..? என்று பாக்கியராஜிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து அதன் பிறகு படத்தை தயாரிக்க செல்கிறார்கள்.

அந்த அளவுக்கு பாக்கியராஜ் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார். இவர் இயக்கி நடித்த படங்கள் ஒரு காலத்தில் இரண்டு, மூன்று வருடங்கள் ஒரே திரையரங்கில் ஓடிய வரலாறு எல்லாம் இருக்கிறது.

அந்த அளவுக்கு எதார்த்தமான கதைகளும் உண்மைக்கு நெருக்கமான காட்சி அமைப்புகள் என பாக்கியராஜின் சினிமா பயணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய சொத்து என கூறலாம்.

இந்நிலையில், நடிகர் செந்தில் குறித்தான தன்னுடைய அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து ரசிகர்களை கண்கலங்க செய்திருக்கிறார் நடிகர் பாக்யராஜ்.

அவர் கூறியதாவது, நடிகர் செந்தில் நாடக நடிகராக இருந்த நேரம். எதேர்ச்சையாக அந்த நாடகத்தை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது அங்கே அவருடன் இருந்தவர்கள் நடிகர் செந்திலைப் பார்த்து மிகவும் கேவலமாக பேசுவார்கள். மரியாதை குறைவாக நடத்துவார்கள்.

அனைவரின் முன்பும்.. டேய் சொட்ட இங்க வாடா.. போய் டீ வாங்கிட்டு வாடா.. அது இது.. என அவரை ஏளனமாக கேவலப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நாடகத்தில் செந்தில் திறமையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

ஆனால் அவ்வளவு திறமை இருந்தும் இப்படி அனைவரின் முன்பும் அவமானப் படும் செந்திலை பார்ப்பதற்கு எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அப்போது ஒரு முடிவு எடுத்தேன். நான் இயக்குனராகும்போது கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

இவர் நடிப்பு திறமை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனுடன் அவர் அவமானப்பட்ட அந்த காட்சிகளும் என் கண்ணை விட்டு நீங்க மறுத்தது. நாட்கள் நகர்ந்தன.

நான் இயக்குனரானேன். முதல் வேலையாக நடிகர் செந்திலை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தேன். அப்படித்தான் தூரல் நின்னு போச்சு, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் அவர் நடித்தார்.

அதன் பிறகு செந்தில் மிகப்பெரிய உயர்வுக்கு சென்றார். இதில் எனக்கு மிகப்பெரிய மன நிறைவு கிடைத்தது என பேசி இருக்கிறார் பாக்யராஜ்.

இதனை பார்த்த ரசிகர்கள் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டுமானால் பல கஷ்டங்களை சந்தித்து அவமானப்பட்டு துன்பம் அடைந்த பிறகு தான் வர முடியும். இங்கு அனைத்து மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுடன் வாழ்ந்து கொண்டே உயரத்தை எட்ட வேண்டும்.

ஆனாலும், நீங்கள் செய்த அந்த ஒரு சிறு உதவி செந்திலுக்கு மிகப்பெரிய வாழ்க்கையையும், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கலைஞனையும் கொடுத்திருக்கிறது. உங்கள் நல்ல மனம் வாழ்க என்று பாக்யராஜுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version