நடிகர் ரஞ்சித் ஒரு காலத்தில் குணச்சித்திர வேடங்கள் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். இடையில் சில படங்களை இயக்குகிறேன் தயாரிக்கிறேன் பேர்வழியில் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளானார்.
அதன் பிறகு இவருடைய சினிமா பயணம் தொய்வு கண்டது. இந்நிலையில், சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது.
குறிப்பாக சமூகங்கள் இடையிலான விவாதத்தை உண்டு பண்ணியது. திரைப்படத்தில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் நடிகர் ரஞ்சித் ஆக்ரோஷமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
இது மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் இவர் குறித்து கலாய் கருத்துக்களையும் மீம்களையும் பறக்க விட ஆரம்பித்து விட்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி இதனை எப்படி ஹேண்டில் செய்யப் போகிறார்..? என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் எல்லாம் நினைத்ததற்கும் பல படி மேலே சென்று மேடையிலேயே அத்தனை சர்ச்சைகளுக்குமான கேள்வியை நறுக்கு நறுக்கு என கேட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் ரஞ்சித்தை பிக் பாஸ் மேடையில் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி அவரிடம் நேரடியாகவே கவுண்டம்பாளையம் படம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். என்னுடைய வயது என்ன..? உங்களுடைய வயது என்ன..? என்று தெரியாது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் சிறு வயதில் இருந்தே உங்களுடைய படங்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து நதி பூ படத்தில் உங்களைப் பார்த்து உங்களுடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன்.
ஒரு நல்ல நண்பனாக உங்களை நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு நிறைய படங்களில் உங்களை பார்த்திருக்கிறேன். குறிப்பாக நீங்கள் இயக்கிய பீஷ்மர் திரைப்படத்தை பார்த்து நான் நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன். அந்த திரைப்படம் அவ்வளவு எனக்கு பிடித்திருந்தது.
அதன் பிறகு நீங்கள் ஏன் படங்களில் நடிக்கவில்லை இயக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்தது. சமீபத்தில் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கியிருந்தீர்கள். நான் சிந்து நதி பூ, பீஷ்மர் படங்களில் பார்த்த ரஞ்சித்தை, கவுண்டம்பாளையம் படத்தில் பார்க்கவில்லை.
அப்படியே ஆளே மாறி இருக்கிறீர்கள். நான் சிறுவயதில் பார்த்து ரசித்த அன்பான நபரா ரஞ்சித்..? அல்லது கவுண்டம்பாளையம் படத்தில் வரக்கூடிய ஒரு நபரா ரஞ்சித்..? என்ற கேள்வியை நேரடியாகவே ரஞ்சித்தை பார்த்து எழுப்பினார் நடிகர் விஜய் சேதுபதி.
இதனை கேட்ட ரஞ்சித் நிதானமாக பதில் கொடுக்க ஆரம்பித்தார். நீங்கள் எப்படி என்னை ஒரு அன்பான மனிதனாக பார்த்தீர்களோ.. அதுதான் என்னுடைய உண்மையான குணம்.. நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய கதை, கரு ஆகியவை படமாக வெளிவரும் பொழுது அது நாம் எதிர்பார்த்த விஷயத்தை கொடுக்குமா..? என்ற எந்த உறுதியும் சொல்ல முடியாது.
அது போல தான் நான் ஒன்று நினைத்து கவுண்டம்பாளையம் படத்தை எடுத்தேன். ஆனால் அதனை ரசிகர்கள் ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இது தவறுதான் போலிருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
வாழ்க்கையில் அன்பான நண்பர்களை சேர்ப்பது மிகவும் கடினமான விஷயம் என்பது எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் சிறுவயதில் எப்படி என்னை ஒரு அன்பான நடிகராக பார்த்தீர்களோ அன்பான மனிதனாக பார்த்தீர்களோ அதுதான் என்னுடைய உண்மையான குணம்.
கவுண்டம்பாளையம் திரைப்படம் நான் ஒன்று நினைத்து எடுத்தேன். ஆனால் அதனுடைய முடிவு வேறு மாதிரி வந்தது. எல்லா படமும் இப்படித்தான் நாம் ஒன்று இணைத்து எடுப்போம் அது ஒரு மாதிரி வரும்.
நாம் எடுக்கக்கூடிய படம் ரசிகர்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும்… நாம் எடுத்த படம் நமக்கே சில விஷயங்களை சொல்லும்.. அப்படித்தான் கவுண்டம்பாளையம் திரைப்படம் எனக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. நான் அதனை புரிந்து கொண்டு இருக்கிறேன் என கூறினார்.
அப்போது பேசிய நடிகர் விஜய் பகுதி அதுதான் கலை. கலையின் பொறுப்பே அது தான். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அது நமக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு போகும்.
அதுபோல் கவுண்டம்பாளையம் திரைப்படம் உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன் என சொல்லி அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் இவருடைய அந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.