Site icon Tamizhakam

அந்த CD-யில் என் அப்பாவை பார்த்த போது.. பிக்பாஸ் தர்ஷிகா வேதனை..!

BiggBoss Tharshika opened up about her unique upbringing, sharing a heartfelt revelation.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாரியான ரசிகர் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிக்பாஸ் தர்ஷிகா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய அப்பாவை அந்த CD-யில் பார்த்தபோது.. யார் இவர்..? என்று தெரியாமல் குழம்பினேன் என்றும் என்னுடைய அப்பாவையே எனக்கு அடையாளம் தெரியவில்லை என்ற வேதனையை பதிவு செய்திருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த விழாவிற்கு நாங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால், எங்கள் மீது இருந்த அன்பு காரணமாக அவர்கள் எங்களுடைய குடும்ப புகைப்படத்தை அந்த விழாவின் CD-யில் இணைத்து இருந்தார்கள்.

அந்த CD-யை எங்கள் வீட்டில் போட்டு பார்க்கும் போது யார் இவர்..? என்று என்னுடைய அம்மாவிடம் நான் கேட்டேன்.

ஏனென்றால் சிறு வயதிலிருந்து என்னுடைய அம்மாவுடன் மட்டும் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பா எப்படி இருப்பார்..? அவருடைய முகம் எப்படி இருக்கும்..? என்று எனக்கு தெரியாதுங்க..

ஒரு அளவுக்கு தான் என்னுடைய அப்பா இப்படித்தான் இருப்பார் என்ற அறிவு எனக்கு இருக்கிறது. தற்போது கூட திடீரென என்னுடைய அப்பாவின் புகைப்படத்தை என்னிடம் காட்டினால் அவர் யார் என்று என்னால் உடனே கண்டுபிடிக்க முடியாதுங்க.. என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.

Summary in English : BiggBoss Tharshika opened up about her unique situation, sharing that she can’t suddenly recognize her father’s face because she’s primarily grown up with her mother.

Exit mobile version