பீரியட்ஸ் நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் அவளுக்கு இதை செய்யணும்.. வெளிப்படையாக கூறிய சிவாங்கியின் அம்மா..!

பாடகி சிவாங்கி கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரத்தில் மே மாதம் 25-ஆம் தேதி 2000 ஆவது ஆண்டு பிறந்தவர். இவர் தந்தை டாக்டர் கே கிருஷ்ணகுமார் ஒரு பாடகராக திகழ்கிறார். அதுபோல இவரது தாயார் பின்னி கிருஷ்ணகுமார் ஒரு மிகச் சிறந்த பின்னணி பாடகி ஆவார்.

தற்போது சிவாங்கி கிருஷ்ணகுமார் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் 7 என்ற பாடல் போட்டியில் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் 2020 ஆம் ஆண்டு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சிகள் பங்கேற்று பிரபலமானார்.

பீரியட்ஸ் நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் அவளுக்கு இதை செய்யணும்..

சின்னத்திரை நடத்திய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.இதை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளும் பாடக்கூடிய வாய்ப்புகளும் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு மாரோ என்ற பாடலை 2021 ஆம் ஆண்டு பாடினார். முருங்கைக்காய் சிப்ஸ் காக இந்த பாடல் பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஓணம் சிறப்பு ஸ்பெஷலாக 2021 ஆம் ஆண்டு வெளியான அடிபொலி பாடலை வினித் ஸ்ரீனிவாசலோடு இணைந்து பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சிவாங்கியின் அம்மா பின்னி பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படுகின்ற மாதவிடாய் குறித்து விரிவாக பேசியதோடு மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தன் மகள் பீரியட் டைமில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது அவளுக்கு சத்துள்ள ஆகாரங்களை கண்டிப்பாக கொடுத்து அனுப்புவதாக வெளிப்படையாக கூறியது அனைவர் மத்தியிலும் இதுபோல செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெளிப்படையாக கூறிய சிவாங்கியின் அம்மா..

மேலும் அந்த மாதிரி சமயங்களில் தனித்து இருக்க வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அது எனக்கு கூடி நிகழ்ந்தது. நான் அந்த சமயத்தில் சற்று மன வருத்தத்தோடு தான் இருந்தேன்.

அது மட்டுமல்லாமல் தன் மகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது அது மாதிரியான சமயங்களில் எனர்ஜியே இல்ல ரொம்ப சலிப்பா இருக்கு என்று கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் பிரேக் கிடைக்கும் போது நமக்கு தேவையான எனர்ஜியை பெற போதுமான அளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருப்பதாக கூறினார்.

மேலும் ஹாட்பாகில் ஒத்தடம் கொடுத்தபடி தான் இருப்பார்கள். ஷூட்டிங் இருக்கக்கூடிய சமயத்தில் வந்து சலிப்பில்லாமல் எனர்ஜியோடு அந்த பணியையும் முடித்துவிட்டு வருவாள். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் பெண்களை தயவு செய்து தள்ளி வைக்காமல் முடிந்த வரை அவர்கள் மனம் உற்சாகம் ஏற்படக்கூடிய வகையில் நடந்து கொள்ளுங்கள் என சிவாங்கியின் அம்மா சொல்லி இருப்பது பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam