ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள சில மருத்துவ குறிப்புகள்.

 உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி ,காய்ச்சல் ,வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.எனவே இரத்ததை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். 

உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ரத்த விருத்தி செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் காணலாம். 

இரத்த விருத்திக்கான பொருட்கள்

பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். 

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் மிகவிரைவில் உற்பத்தியாகும். 

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் ரத்த விருத்தி ஆகிறது. இதனுடன் இஞ்சி சாறு தேன் கலந்து சாப்பிடும் பொழுது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. 

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும் .ஆனால் வாத நோய் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. 

இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் நம்மை சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளும் பசியைத்தூண்டும் தன்மை இந்த இலந்தைப் பழத்திற்கு உள்ளது. 

இன்றைய நாகரீக காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ரத்தக்குழாய் அடைப்பு .இதை சாதாரணமாக நாம் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். 

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு ஏற்படாது. ரத்த அழுத்தத்தை முற்றிலும் போக்க இயற்கை வழியில் கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்தால் போதும்.

மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை எடுத்து வந்தால் BP என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam