கொட்டும் மழையிலும் கோட்டை விடாத வேட்டையன்.. பங்கம் செய்யும் ப்ளூ சட்டை மாறன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்திருக்கும் வேட்டையன் திரைப்படம் ஞானவேல் இயக்கத்தில் வெளி வந்து ஒட்டுமொத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகுஜன பத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ரஜினி படம் தளபதி விஜய் படம் வந்தாலே இரு தரப்பிலும் இருக்கும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் வம்படியாக தாக்கிக் கொண்டு எந்த படம் மாஸ் வசூலை தந்தது யார் நடித்தது சிறந்தது என்று பட்டிமன்றம் போட்டு பேசுவார்கள்.

கொட்டும் மழையிலும் கோட்டை விடாத வேட்டையன்..

அந்த வகையில் தற்போது கொட்டும் மழையிலும் கோட்டை விடாத வேட்டையின் வசூலை வாரி குவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் தளபதி நடிப்பில் வெளிவந்த கோட் படத்தை விட அதிக அளவு வசூலை செய்திருக்கும் என்று ரஜினி ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வேட்டையின் படத்தை ட்ரோல் செய்து வெளியிட்டு இருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இந்த படம் தியேட்டர்களில் மாஸ் வெற்றியை பெற்று தந்ததாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினியோடு அமிதாப் பச்சன், பகத் பாஸில், துஷ்ரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி என பல நடித்து இருக்க இந்த காம்போ மிகச்சிறந்த மேஜிக்கை செய்துள்ளது என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் முழு திருப்தி அடைந்திருப்பதாகவும் ரஜினியின் மாசுக்கு தக்கவாறு இந்த படம் அமைந்துள்ளதாகவும் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் ரஜினி மீண்டும் ஈர்த்துவிட்டார் என்று சொல்லப்படும் நிலையில் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

பங்கம் செய்யும் ப்ளூ சட்டை மாறன்..

ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இந்த படம் ஞானவேலுக்கு தன்னுடைய கெரியரில் மிக முக்கிய படமாக அமையும் என்று சொல்லுவதோடு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கோட் படத்தின் வசூலை வேட்டையன் படம் முறியடிக்க வேண்டும் என்று முழுமூச்சாக இருக்கக்கூடிய ரஜினி வெறியர்கள் தற்போது இந்த படம் நான்கு நாட்களில் சுமார் 240 கோடி வசூலை செய்து கெத்து காட்டியதை அடுத்து கோட்டை விட இந்த வசூல் அதிகம் என்று சொல்லுகிறார்கள்.

எனினும் மறுபக்கம் கோட் படத்தளவு இன்னும் வசூலை வேட்டையன் செய்யவில்லை இது கம்மிதான் என்று ஒரு பஞ்சாயத்தில் நடந்து வருகிறது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்‌ எனவே நான்கு நாள் முடிவதற்குள்ளாவது வேட்டையன் கோட் படத்தை முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இதற்கு இடையூறாக இயற்கை கொட்டிச்சொறியும் மழையால் வேட்டையன் கோட்டை விட்டு விடாமல் ஆறாவது நாளான நேற்று ஐந்து கோடி ரூபாயை மட்டும் வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்டையன் வசூல் பற்றி ட்ரோல் செய்திருக்கிறார். மேலும் தனது எக்ஸ் தளத்தில் அடாத மடங்கிலும் அடங்காத வசூல் வேட்டை ராஜாதி ராஜா ராஜகோபால் என வடிவேலு நடித்த ஒரு காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து இருக்கிறார் அதில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam