சினிமாவில் அறிமுகமான காலங்களில் இருந்தே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. அப்போதைய சமயங்களில் அவர் நடித்த ஜெயம், எம்.குமரன், தில்லாலங்கடி சம்திங் சம்திங் மாதிரியான நிறைய திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன.
அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் மாறியது. தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு அதிகமாக சீரியஸான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் ஜெயம் ரவி. அப்படியாக நடித்த படங்களில் சில படங்கள் கைகொடுத்தன என்றாலும் பல படங்கள் அவருக்கு தோல்வியைதான் பெற்றுக் கொடுத்தன.
படத்தின் கதை இதுதான்
ஜாலியான ஜெயம் ரவி திரைப்படங்களை பார்த்து பழகிய மக்களுக்கு இவ்வளவு சீரியசான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் கூட தொடர்ந்து ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
இந்த நிலையில் வெகு காலங்களுக்குப் பிறகு மீண்டும் மிக ஜாலியான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அந்த திரைப்படம்தான் பிரதர்.
என் குடும்பத்துக்காக நடிச்சேன்
பிரதர் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. வெகு வருடங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று அவரே இது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படம் குறித்து முக்கிய விஷயம் ஒன்றை அவர் தனது பேட்டியில் கூறி இருக்கிறார். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக எப்பொழுதுமே நான் படம் நடிப்பேன். அந்த வகையில் எனது அம்மாவுக்காக நான் நடித்த திரைப்படம் தான் எம். குமரன்.
உண்மையை கூறிய ஜெயம் ரவி
எனது அப்பாவுக்காக சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற திரைப்படத்தில் நடித்தேன். இப்பொழுது அக்கா செண்டிமெண்டில் மிக முக்கியமான ஒரு கதையாக பிரதர் படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அக்கா மற்றும் தம்பிக்கு இடையேயான சென்டிமென்ட் பேசும் வகையில் இந்த படம் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.
இந்த படத்தின் மக்காமிஷி என்கிற பாடல் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.