ரஜினி லதா விவாகரத்து..? லீக்கான விஷயம்.. ஜெயம் ரவி ஆர்த்திக்கு இனி புத்தி வரட்டும்!! – கண்காணாத இடத்திற்கு சென்ற ரஜினி..

தற்போது திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதோடு தினம் தினம் புதுப்புது செய்திகளும் இது குறித்து வெளி வந்து பலரையும் பல்வேறு விமர்சனங்களை செய்ய வைத்துள்ளது.

அந்த வகையில் இந்த நிலை பற்றி தற்போது செய்யாறு பாலு அண்மை பேட்டி ஒன்றில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் இந்த நட்சத்திர தம்பதிகள் இடையே ஏற்படும் விவாகரத்துக்கள் குறித்து கிசுகிசுக்கள் இன்றல்ல அன்று முதல் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

ரஜினி லதா விவாகரத்து லீக்கான விஷயம்..

தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் எப்படி மீடியாக்களில் வைரலாகி விட்டதோ அது போல 1985-இல் இதை விட பெரிய அளவில் பேசப்பட்ட ரஜினி லதா விவாகரத்து விஷயத்தை தெளிவாக விளக்கி இருக்கிறார்.

தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களைப் போல அன்று ஏதும் இல்லாத நிலையில் இந்த விஷயம் பூதாகரமாக பரவியது பற்றி பரபரப்பான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். 1985-இல் சினிமா மித்திரன் என்ற இதழில் ரஜினி மற்றும் லதா விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளி வந்தது.

இந்த விஷயத்தை தொடர்ந்து மூன்று மாத காலமாக இந்த பத்திரிக்கையில் எழுதினார்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இதில் சில வார இதழ்கள் இதனை கிசுகிசு பாணியில் எழுதியது.

என்னையா சொல்றீங்க ரஜினி கல்யாணம் பண்ணி நல்லாத்தான இருக்காங்க ஒரு குழந்தை இருக்கு போதா குறைக்கி இப்போ லதா தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார் அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் என்ற ரீதியில் பேச்சுக்கள் வந்தது.

ஜெயம் ரவி ஆர்த்திக்கு இனி புத்தி வரட்டும்..

இந்த விவாகரத்து பிரிவுக்காக பல காரணங்கள் சொல்லப்பட்டது. அதில் ஒன்று ரஜினிகாந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்ததை அடுத்து தீவிர ஆன்மீகத்தில் இறங்க இருப்பதால் குடும்ப வாழ்க்கையை விட்டு விலகுவார் என்று சொல்லப்பட்டது.

மேலும் அந்த இயக்கத்திற்காக போயஸ் கார்டன் வீட்டையே தானமாக தந்து விட்டதாகவும் செய்திகள் பரவியது. இதை அடுத்து சென்னையில் புறநகர் பகுதியாக அன்று இருந்த வேளச்சேரியில் ஒரு வீடு கட்டப்பட்ட நிலையில் அந்த வீட்டுக்கு குடியேற ரஜினி கூறியதை அடுத்து அங்கு செல்ல மறுத்து லதா ரஜினிகாந்த் ரஜினியோடு சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது.

#image_title

மேலும் அந்த சமயத்தில் ராகவேந்திரா படத்தில் நடித்த காரணத்தால் தனது மனைவியை தள்ளி வைத்து விட்டு முழு நேர ஆன்மீகவாதியாக மாறிவிட்டார் என்பது போன்ற வதந்திகள் வெகு வேகமாக பரவியது.

மேலும் பாலிவுட் படத்தில் நடித்த ரஜினி தன்னோடு இணைந்து நடித்த மீனாட்சி சேஷாத்திரி தான் தன்னோடு நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருவதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகை இல்லை என்றால் படமே வேண்டாம் என்று ஒதுங்கியதாகவும் இவர் தான் ரஜினியின் குடும்ப குழப்பத்திற்கு காரணம் என்றும் பேசப்பட்டது.

அத்தோடு இல்லாமல் ரஜினியை லதா ரஜினிகாந்தின் குடும்பம் ஓவர் டேக் எடுத்து தங்களது கண்ட்ரோலில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அவர்கள் சொல்லக்கூடிய படங்களில் தான் நடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

கண்காணாத இடத்திற்கு சென்ற ரஜினி..

இதனை அடுத்து கண்காணாத இடத்திற்கு இமயமலை மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு குழந்தை குட்டி மனைவி என அனைவரையும் விட்டு விட்டு சென்றதை அடுத்து ஒரு நாள் கனவில் தன் மகள் தன்னை அழைப்பது போல் தெரிய ஒரு துறவி ஏன் இப்படி உன்னை வருத்திக் கொள்கிறாய் என்று கேட்டதை அடுத்து வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

துறவரம் செல்வதற்கு முன் பாலச்சந்தர் லதா மற்றும் ரஜினி இடையே கலந்து பேசி அவர் வழியில் சென்று தான் அவரை பிடிக்க வேண்டும் செய்து லதாவை அனுப்பி வைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இப்படி ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி ஆரம்ப நாளில் தன் குடும்ப வாழ்க்கையில் எத்தகைய இடங்களில் சந்தித்து இருந்தாலும் தற்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

அதுபோலத் தான் என்ன பிரபலங்களும் இந்த நிகழ்வை நினைத்து உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் காத்திருப்பதால் எந்த சிரமமும் ஏற்படாது என்பதை புரிந்து கொள்ளத்தான் இந்த கதையை நான் கூறினேன் என செய்யாறு பாலு, ஜெயம் ரவி ஆர்த்தி விஷயமும் அப்படி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் பொறுத்திருப்பது நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version