Coromandel Express Accident : 20 ஆண்டுகளுக்கு முன்பே ரயிலின் பெயருடன் “அன்பே சிவம்” படத்தில் கூறிய கமல்..!

Coromandel Express Accident : சமீப காலமாக திரைப்படங்களில் வரும் காட்சிகள் அப்படியே நிஜ உலகில் நடக்கும் பொழுது முன்பே இந்த திரைப்படத்தில் இது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது இது இலுமினாட்டிகளின் வேலை தான் என்று பல்வேறு காணொளிகள் மற்றும் பதிவுகளை நாம் பார்த்து வருகிறோம்.

Anbe Sivam

அந்த வகையில், சமீபத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஒவ்வொரு இந்தியனின் இரவு உறக்கத்தையும் கெடுத்த ஒரு நிகழ்வு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 இல் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து கிட்டத்தட்ட 280க்கும் மேற்பட்ட உயிர்களை இந்தியா இழந்திருக்கிறது.

மேற்கொண்டு உயிரிழப்புகளை அதிகரிக்க விடாமல் தடுக்க மருத்துவர்கள் மற்றும் ரத்ததானம் செய்யும் தன்னார்வளர்கள் என பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Anbe Sivam

மறுபக்கம் இது போன்ற விபத்துகள் இனி ஏற்பட்டு விடவே கூடாது என்று முழு மூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கும் அரசு இயந்திரம் ஒரு பக்கம் இருக்க இந்த விபத்து சம்பவத்தை விபத்துக்குள்ளான ரயிலின் பெயருடன் பதிவு செய்திருக்கிறது நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அன்பே சிவம் திரைப்படம்.

இந்த திரைப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் ரயில் விபத்து காட்சி ஒன்று காட்டப்பட்டிருக்கும். அந்த காட்சிக்கு முன்னும் பின்னும் இந்த விபத்து ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த விபத்தை முன்கூட்டியே கணித்து தன்னுடைய மனதில் கூறியிருக்கிறார் கமல்ஹாசன் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Anbe Sivam

இது எதேச்சையாக நடந்ததா..? அல்லது இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார்களா..? என்ற கேள்வி இணையபக்கங்களில் இணையவாசிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Anbe Sivam

ஏற்கனவே, கமலஹாசன் ஒரு இலுமினாட்டி ஏஜெண்ட் என்று இலுமினாட்டி குறித்து ஆய்வு செய்யும் பலரும் கூறி வரும் நிலையில் இந்த காட்சி பெரும் பேசு பொருள் ஆகியுள்ளது.

இந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam