யூஸ் இல்லன்னு ஒதுக்கிட்டாங்க… 10 வருஷமா அந்த வலியோட என் வாழ்க்கை –  கண் கலங்கிய டிடி திவ்யதர்ஷினி..!

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களாக இருந்த ஒரு சிலரில் மிக முக்கியமானவர் டிடி திவ்யதர்ஷினி. டிடி திவ்யதர்ஷினி தன்னுடைய இளம் வயதிலிருந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தொகுப்பாளர் வேலை என்பது அவரது ரத்தத்திலேயே ஊறியது என்று கூறலாம். அந்த அளவிற்கு சிறுவயதிலிருந்தே மிக சாதாரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை செய்து வந்தார். சிவகார்த்திகேயனுக்கு முன்பிருந்தே விஜய் டிவியில் டிடி இருந்து வந்தார்.

யூஸ் இல்லன்னு ஒதுக்கிட்டாங்க

சொல்ல போனால் விஜய் டிவியில் முதலில் பிரபலமாக இருந்தவர் டிடி திவ்யதர்ஷினி தான். அதற்கு பிறகுதான் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடித்தார். இந்த நிலையில் திடீரென்று ஏன் சில வருடங்கள் டிடி விஜய் டிவியில் இருந்தும் சினிமாவில் இருந்தும் காணாமல் போனார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது.

#image_title

பிறகு அவரது காலில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதாக பேச்சுக்கள் என்று வந்தன. அதனால் தொடர்ந்து தொகுப்பாளராக அவரால் பணியாற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. ஏனெனில் பொதுவாகவே எந்த ஒரு டிவி சேனலிலும் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் நின்று கொண்டு தான் பேசுவார்கள்.

10 வருஷமா அந்த வலியோட

அவர்கள் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற காட்சிகளை நாம் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை வேலையாக கொண்டிருந்த டிடி திவ்யதர்ஷினிக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டது.

இது அவரது தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார். உண்மையிலேயே உங்கள் காலில் என்னதான் பிரச்சனை என்று தொகுப்பாளர் கேட்கும் பொழுது அவர் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

கண் கலங்கிய டிடி திவ்யதர்ஷினி

அதில் கூறும் பொழுது முதலில் எனக்கு கால் முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது அதற்காக ஆபரேஷன் செய்யும்பொழுது அதை தவறாக செய்துவிட்டனர். அதை திரும்ப சரி செய்வதற்கு இரண்டு ஆப்ரேஷன்கள் செய்ய வேண்டி இருந்தது.

அதற்குள் எனக்கு காலில் வேறு ஒரு பிரச்சனை உருவாகிவிட்டது. இந்த பிரச்சனை யாருக்கு எப்பொழுது வரும் என்று எல்லாம் தெரியாது. திடீரென்று யாருக்காவது வந்துவிடும் இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று யோசித்தே எனக்கு இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன.

பிறகுதான் இதை சரி செய்ய முடியாது இந்த பிரச்சனையோடு எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை எனக்கு ஏற்பட்டது. ஆதலால் ஒரு இரண்டு நிமிடம் கூட என்னால் நின்று பேச முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.

எனது வேலையும் போனது நான் நம்பிய அனைவரும் என்னை கைவிட்டனர் வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போனது. அதற்குப் பிறகு இதே பிரச்சினைவுடன் எப்படி வாழ்வது என்று கற்றுக்கொள்ள துவங்கினேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த பிரச்சனையில் நான் இருந்து வருகிறேன் ஆனால் இந்த பத்து வருடங்களில் 10 நாள் கூட நான் வலி இல்லாமல் தூங்கி இருக்க மாட்டேன் என்று கூறுகிறார் டிடி திவ்யதர்ஷினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version