எல்லாம் கேட்டுட்டு சமயத்தில் வன்மம் தீர்த்த டிடி… நயன்தாராவுக்கு செய்த சம்பவம்!..

விஜய் டிவியில் வெகுகாலங்களாகவே அதிக புகழ் பெற்ற ஒரு தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி திவ்யதர்ஷினி. தன்னுடைய இளம் வயது முதலே விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இதனாலேயே அதிக புகழ்பெற்ற ஒரு தொகுப்பாளராக சின்னத்திரையில் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது புகழ் சினிமாவிலுமே அதிகரித்ததன் காரணமாக அடிக்கடி இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

தொகுப்பாளர் டிடி திவ்யதர்ஷினி:

ஆரம்பத்தில் கதாநாயகியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும் கூட அதை ஏற்க மறுத்துவிட்டார் டிடி திவ்யதர்ஷினி. அதற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார் டிடி. இதனால் டிடி திவ்யதர்ஷினி பெரிதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் அதை தொகுத்து வழங்காமலும் இருந்து வந்தார்.

அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து பிரிந்தார் திவ்யதர்ஷினி. டிடியை பொருத்தவரை அவர் விஜய் டிவியில் பணியாற்றிய பொழுது அவரது பெயரிலேயே காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

வன்மம் தீர்த்த டிடி

அந்த நிகழ்ச்சியில் எக்கச்சக்கமான பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார் டிடி திவ்யதர்ஷினி. அப்படியாக அவர் பேட்டி எடுத்தபொழுது நடந்த சில சம்பவங்கள் நயன்தாராவை பாதிக்கும் வகையில் அமைந்தன. அதாவது மாளவிகா மோகனன் ஒருமுறை பேட்டி கொடுக்கும்போது நயன்தாரா குறித்து டிடி திவ்யதர்ஷினியிடம் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தில் நடிகை மருத்துவமனையில் இருக்கும் காட்சி இருக்கும். மருத்துவமனையில் படுத்து இருக்கும் அந்த நடிகை முழுவதுமாக மேக்கப் போட்டுக் கொண்டு ஒரு முடி கூட கலையாமல் அமர்ந்திருப்பார்.

நயன்தாராவுக்கு செய்த சம்பவம்

அதை பார்க்கும் பொழுது நகைச்சுவையாக இருந்தது என்று கூறியிருந்தார் அது நயன்தாரா ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி என்று கூறப்படுகிறது. இதனை அடுத்த அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதே டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா கூறும் பொழுது கமர்சியல் திரைப்படங்களில் இதையெல்லாம் ஒரு தவறாக பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.

அந்த தினத்தில் டிடி என்ன நிற ஆடை அணிந்திருந்தாரோ அதே நேரத்தில் தான் நயன்தாராவும் ஆடை அணிந்திருந்தார். இந்த நிலையில் அப்பொழுது அமைதியாக இருந்த டிடி பிறகு வேறொரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது ஒரு நடிகையை நான் பேட்டி எடுக்க சென்ற பொழுது நானும் அவரும் ஒரே நிறத்தில் புடவை கட்டி இருந்தோம்.

அதனால் நான் புடவையை மாற்ற வேண்டும் என்று அந்த நடிகை கூறினார். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. தொகுப்பாளர் என்றால் அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? என்று நினைத்தேன் என்று நயன்தாராவையே திரும்ப விமர்சித்து இருக்கிறார் தேடி திவ்யதர்ஷினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version