அமரன் : மறைக்கப்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் பின்புலம்..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

There’s been quite a buzz lately about the biopic “Amaran” and the portrayal of Mukunth Varatharajan’s caste. Some folks are scratching their heads, wondering why such a significant aspect of his identity was downplayed or even hidden in the film.

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அமரன் திரைப்படத்தில் ஹீரோவாக இடம் பெற்ற கதாபாத்திரமான முகுந்த் வரதராஜன் பின்புலம் மறைக்கப்பட்டிருக்கிறது. இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் கூட்டணியில் வெளியான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்த திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை தாண்டி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் புதிய மைல் கல்லாக அமரன் திரைப்படம் மாறி இருக்கிறது.

படத்தின் கதையும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. எல்லாம் சரி, ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக முன்னிறுத்தப்படும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுடைய பின்புலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

படத்தின் இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் தான். ஒன்று சாய்பல்லவி, இன்னொன்று மேஜர் முகுந்த். இந்த படத்தில் மேஜர் முகுந்தின் மனைவி ஒரு கிறிஸ்தவர். அவர் கிறிஸ்தவ பெண்ணாகவே காட்டப்படுகிறார். அதுதான் உண்மையும் கூட. அதே நேரம் படத்தில் சாய்பல்லவி கதாபாத்திரம், அவருடைய வீடு, அவருடைய பெற்றோர்கள், அவர்கள் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டுள்ள இயேசுவின் புகைப்படம் என முழுதாக ஒரு கிறிஸ்துவ பெண்ணாக காட்சியாகவே காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், மேஜர் முகுந்த் ஒரு பிராமணர் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்ற எந்த ஒரு விஷயத்திலும் காட்டாமல் கதையை நகர்த்தி முடித்து விட்டனர்.

படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்தான். ஒரு ராணுவ வீரரை அவருடைய சொந்த அடையாளத்தை மறைத்து ஒரு திரைப்படத்தில் அதுவும் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவருடைய சொந்த அடையாளத்தை மறைக்க வேண்டியது அவசியம் என்ன..?

ஒரு பிராமணரை ஹீரோவாக காட்டக்கூடாது என்று யாராவது அழுத்தம் கொடுத்தார்களா..? அல்லது படத்தை வெளியிட்ட ஆளும் கட்சி பின்னணியை கொண்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஏதாவது அழுத்தம் கொடுத்ததா..? என்ன காரணம்..? படம் முழுக்க சிவகார்த்திகேயன் அவருடைய தந்தையை நைனா என்று அழைக்கிறார்.

இதுவும் முற்றிலும் செயற்கைத்தனமானதாக தெரிகிறது. படத்தில் முகுந்தின் அம்மா ஆரம்ப முதலிலே அவர் ராணுவத்தில் சேர்ந்த பிறகும் கூட தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாகவே காட்டுகிறார்கள்.

சாய்பல்லவி தன்னுடைய கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு கடவுளுக்கு அஞ்சக்கூடிய ஒரு பெண்ணாக காட்டப்படும் அதே நேரத்தில் மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மையான அடையாளம் அவருடைய பின்புலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவே பார்க்க முடிகிறது.

இதனை பயோபிக் என்று எப்படி கூற முடியும்..? இதனை ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என்று சொல்வதே தவறு..! என இந்த வாதத்தை முன் வைப்பவர்கள் கூறுகிறார்கள்.

இது மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான சூரரை போற்று திரைப்படத்திலும் இதே மாதிரி ஒரு பிரச்சனை நடந்தது. தமிழ் பிராமண சமூகத்தை சேர்ந்த கேப்டன் கோபிநாத் என்ற கதாபாத்திரம் அந்த படத்தில் வேறு சமூகத்தை சேர்ந்தவராக காட்டப்பட்டது.

ஜெய்பீம் திரைப்படத்தில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த வில்லன் போலீஸ் அதிகாரியை இந்து வன்னியர் மதத்தைச் சேர்ந்தவர் என்று காட்டினார்கள். இதனுடைய நோக்கம் என்ன..? எதற்காக ஒருவர் பிராமணர் ஹீரோவாக இருந்தால் அவருடைய சமுதாயத்தை மறைக்கிறார்கள்..? அதே சமயம், வேறு மதத்தை சேர்ந்த வில்லனாக இருந்தால் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்..! என்பது இங்கே மிகப்பெரிய சந்தேகத்துக்குரிய விஷயம்.

இங்கே இன்னும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. அது தான், திராவிட இயக்க தலைவர்களின் ஒருவராக கருதப்படும் சுப வீரபாண்டியன் தன்னுடைய twitter பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு.

அதுவும், புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது அவர் எழுதியது. என்னவென்றால் புல்வாமாவில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் அதில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை என்றும் பேசிக் கொள்கிறார்களே..? இது உண்மையா..? என்று உயிரிழந்த ராணுவ வீரர்களில் யாருமே பிராமணர்கள் இல்லை என்று பகடி செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார்.

யோசித்து பாருங்க, ஒட்டு மொத்த நாடே தூயரத்தில் மூழ்கியிருந்த நேரத்திலும் அங்கு இறந்தவர்கள் என்னென்ன சாதி என்பதை ஆராய்ந்து.. பிராமண சமூக மக்களை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருந்தார் திராவிட இயக்க தலைவர் சுப வீரபாண்டியன்.

இப்போது, ஒரு பிராமணர் நாட்டுக்காக போராடி உயிர் இழந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக வெளியாகிறது. அந்த படத்தில் அவருடைய அவர் பிராமணர் என்ற அடையாளம் மறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விஷயங்கள் யாருடைய கட்டளையின் பெயரால் நடக்கிறது..? இப்படி நடக்கக்கூடிய விஷயங்கள் ஏதோ எதேர்ச்சையாக நடந்ததாக நம்ப முடிகிறதா..? அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதாகவே இருக்கிறது.

இதற்கு பின்னால் இருக்கக்கூடியது யார்..? ஏன் இப்படியான விஷயங்களை திட்டமிட்டு மறைக்கிறார்கள்..? அல்லது திட்டமிட்டு மடை மாற்றுகிறார்கள்..? என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்று கூறுகிறார்கள் இந்த விஷயத்தை விவாத பொருளாக கையில் எடுத்து இருக்கக்கூடிய நபர்கள்.

Summary in English : There’s been quite a buzz lately about Mukunth Varatharajan’s biopic, “Amaran,” and one hot topic of debate is why his caste was downplayed in the film. Some viewers feel that omitting this aspect of his identity takes away from the full picture of who he was and what he stood for. Others argue that focusing too much on caste might overshadow his achievements and the universal themes of perseverance and resilience that the movie aims to highlight. This discussion really taps into a larger conversation about representation in cinema.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam