நடிகர் தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகன் தனுஷ் குறித்து அவருடைய ஆரம்ப நாட்கள் குறித்தும் பேசினார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் இதுதான் The real “Irunga Bhaai” moment என்று மெய்சிலிர்த்து வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தை வியாபாரம் செய்து முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் அந்த படம் விற்பனையாகாமல் இருந்தது.
அப்போது ஒரு மிகப் பெரிய விநியோகஸ்தரை அணுகி அவருக்கு அந்த படத்தை போட்டு காண்பித்தேன். படம் முடிந்த பிறகு அவர் எங்கே இருக்கிறார்..? என தேடினேன்.
படம் பார்த்து அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். ஆனால், யாருக்காக அந்த படத்தை போட்டு காண்பித்தேன்.. அவர் அங்கு காணவில்லை… உடனே அவருக்கு போன் போட்டு சார் எங்க இருக்கீங்க..? உங்களுக்காக தான் அந்த படத்தை ஒளிபரப்பை ஏற்பாடு செய்தேன்.
எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டீர்களே..? என்று தொலைபேசியில் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்ன அண்ணே சொல்ல சொல்றீங்க..? நம்ம பையன் நம்ம கண்ணுக்கு அழகா தான் தெரிவான்.. ஆனால் பணம் கொடுத்து படம் பார்க்க வர ரசிகர்களின் கண்ணனுக்கு அழகாக தெரிவானா..?என்று மூஞ்சியில் அடித்தது போல பேசினார்.
அதே விநியோகஸ்தர் இரண்டு ஆண்டுகள் கழித்து எப்படியாவது தனுஷின் கால் சீட்டை எனக்கு வாங்கி கொடுங்கள் என்று கெஞ்சினார் என பேசி இருக்கிறார்.
இவருடைய அந்த பேச்சை கேட்டு ரசிகர்கள் இதுதான் The real “Irunga Bhaai” moment என்று மெய் சிலிர்த்து வருகின்றனர்.
The real “Irunga bhai” moment 🗿#Dhanush pic.twitter.com/EEaVnRgoMt
— 𝘼𝙉𝙏𝙊 ★ D•Stan (@Anto_D_stan) October 20, 2024