முதல் நாளே காதலை வெளிப்படுத்திய தர்ஷா குப்தா..! ஆனாலும்.. நீ ரொம்ப ஸ்பீடுமா..! பிக்பாஸ் 8 அப்டேட்..!

பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான தர்ஷா குப்தா பிக்பாஸ் 8-வது சீசனில் மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்து இருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாகவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலை நம்முடைய தமிழகம் டாட் காம் தளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தோம்.

தற்போது அது உண்மையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிக் பாஸ் ஏழாவது சீசனிலேயே தர்ஷா குப்தா போட்டியாளராக வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக ஏழாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க முடியாமல் போனது இந்நிலையில் தற்போது எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நடிகை தர்ஷா குப்தாவிற்கு பிக்பாஸ் ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுக்குமா..? அல்லது இருக்கும் பெயரையும் டேமேஜ் ஆக்கிவிடுமா..? என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்நிலையில், வீட்டிற்குள் வந்த நடிகை தர்ஷா குப்தா ஏற்கனவே உள்ளே வந்திருந்த தயாரிப்பாளர் ரவிந்தர் சஞ்சனா ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது உள்ளே வந்ததிலிருந்து ஏதோ தண்ணீர் சொட்டுவது போல சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சஞ்சனா கார்டன் ஏரியாவில் சோபாவுக்கு பின்னால் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி போன்ற செட்டப் செய்து இருக்கிறார்கள்.

அதிலிருந்து வரக்கூடிய சத்தம் தான் இது என்று கூறினார். உடனே அங்கு விரைந்து சென்ற தர்ஷா குப்தா நான் தண்ணீர் மற்றும் கடற்கரையின் காதலி. தண்ணீர் என்றாலே நான் குஷியாகி விடுவேன் என்று தன்னுடைய காதலை முதல் நாளே வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொதுவாக போட்டியாளர்கள் தங்களுக்கு என்ன பிடிக்கும்.. பிடிக்காது.. என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் நடிகை தர்ஷா குப்தா உடனே தனக்கு கடற்கரை, நீர் இது போன்ற விஷயங்களில் எல்லாம் காதல் உண்டு என்று பேசியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஆனாலும் நீ ரொம்ப ஸ்பீடு மா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version