என்ன பார்க்க தனுஷ் செட்டுல?.. அவ்வளவு வருத்தமா இருந்துச்சு… ராயன் பட சம்பவத்தை கூறிய துஷாரா விஜயன்..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு ஒரு பெற்ற ஒரு நடிகையாக துஷாரா விஜயன் மாறி இருக்கிறார். துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பெரும்பாலும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளிடம் பெரிய நடிப்பை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் தொடர்ந்து ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஆனால் துஷாரா விஜயனை பொருத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகியின் கதாபாத்திரத்தை பெரிதாக மக்கள் பேசும் அளவிற்கு அவரது நடிப்பு இருக்கிறது.

என்ன பார்க்க தனுஷ் செட்டுல

சார்பட்டா பரம்பரையில் முதன்முதலாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெரும் ஒரு கதாபாத்திரமாக களமிறங்கினார் துஷாரா விஜயன். அதனை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பெல்லாம் நல்ல நல்ல படங்களாகவே இருந்து வந்தன.

முக்கியமாக தற்சமயம் ராயன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். படம் முழுக்க கதாநாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரம் இவருக்கு இருந்தது.

அவ்வளவு வருத்தமா இருந்துச்சு

இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த அனுபவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் துஷாரா விஜயன் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதில் நிறைய காட்சிகளில் எங்களுக்கு அடிபட்டு கொண்டே இருந்தது.

இதனால் தனுஷ் சார் எப்பொழுதுமே கேரவனை விட்டு வெளியே வர மாட்டார் எங்களுக்கு அடிப்பட்டு இருப்பதை பார்க்கவே அவருக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அவர் எப்போது வெளியே வந்தாலும் நான் கையில் பஞ்சை வைத்துக் கொண்டு எங்கேயாவது அடிபட்டு இருப்பதை துடைத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால் அந்த கஷ்டத்திற்கு சமமான ஒரு படமாக ராயன் படம் இருந்தது. அது வெளியான பிறகு எனக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் பொழுது அதெல்லாம் ஒரு விஷயமாகவே தெரியவில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் துஷாரா விஜயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version