என்ன கொடுமை இது..? நான் யார் என்பதையே மறந்த இயக்குனர் ஷங்கர்.. வைரலாகும் வீடியோ.. கண் கலங்கும் ரசிகர்கள்..!

இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டம் என்ற ஒரு பெயரைக் கேட்ட உடனே அடுத்து நினைவுக்கு வரக்கூடிய ஒரு பெயர் இயக்குனர் ஷங்கர் அந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இவர் கொடுத்த பங்களிப்பு என்பது மிகப்பெரியது.

இவருடைய இயக்கத்தில் வெளியாக கூடிய படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் நடிகர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் நாளை மறுதினம் (ஜனவரி 10ஆம் தேதி) திரைக்கு வர இருக்கிறது. தொடர்ச்சியாக இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் ராஜமௌலி கலந்து கொண்டு சிறப்பித்தார். ராஜமவுலி ஒரு தெலுங்கு பட இயக்குனர். நடிகர் ராம்சரனை வைத்து சில படங்களை இயக்கியிருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறார். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், மேடையில் நான் யார் என்பதை மறந்து இயக்குனர் ஷங்கர் பேசிய சில விஷயங்களை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு முன்பு இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. அதற்காக ஷங்கர் பல கிண்டல் கேள்விகளுக்கு ஆளானார்.

சமீபத்தில் கூட, கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்கே நான்கு பாடல் காட்சிகளுக்கு மட்டும் 92 கோடி செலவு செய்திருக்கிறார் என்ற செய்தி வந்த போது இணைவாசிகள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் அடையாளம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவே முடியாது. ஆனால், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எதுவும் இதுவரை 1000 கோடி என்ற வசூல் இலக்கை எட்டவில்லை.

இன்றைய சினிமா உலகில் 1000 கோடி வசூல் செய்யக்கூடிய படத்தை எடுத்தால் தான் அவர் முன்னணி இயக்குனர் என்ற ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. அந்த வகையில், இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் அட்லீ ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை எடுத்து 1000 கோடி வசூல் செய்து விட்டார்.

இயக்குனர் அட்லீ ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி 1000 கோடி வசூலிக்க கூடிய படத்தின் இயக்குனரை உருவாக்கியதில் பெரும் பங்கு இயக்குனர் ஷங்கருக்கு இருக்கிறது.

ஆனால், ஷங்கரின் படங்கள் இதுவரை எந்த படமும் 1000 கோடி என்று வசூல் இலக்கை எட்டவில்லை. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

மேடையில் பேசிய இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி இந்திய சினிமாவின் ஐகான்.. அவருடைய கையால் என்னுடைய படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்திருப்பது பெருமை அளிக்கிறது என்று ராஜமௌலியை புகழ்ந்து பேசி இருந்தார்.

இந்த பேச்சை ஏதோ ஒரு அறிமுக இயக்குனர் பேசியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஷங்கர் இப்படி பேசுவதை பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. ஷங்கர் நான் யார் என்பதை மறந்து விட்டார் போல் தெரிகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரு மனுஷன். ஹாலிவுட் படங்களை இயக்குனர் ஷங்கர் படங்களில் இருந்து பல்வேறு காட்சிகளை எடுத்து தங்களுடைய படத்தில் வைத்திருக்கிறார்கள். அதனை வெளிப்படையாக கூறியும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நபர் தன்னுடைய கடைசி சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதற்காக ராஜமௌலியை உயர்வாக பேசிக் கொண்டிருக்கிறார். ராஜமவுலி கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர்.. முன்னணி இயக்குனர்.. சிறப்பான இயக்குனர்.. அவரும் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.. அதில் மாற்று கருத்து கிடையாது.

எனவே இந்த பேச்சை வேறு எந்த இயக்குனர் பேசி இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், இயக்குனர் ஷங்கர் இப்படி பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் பொருமி வருகிறார்கள்.

அது சார்ந்த மீம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In a surprising turn of events, director Shankar recently had a moment that left everyone scratching their heads. During an interview, he seemed to forget his own identity and instead showered praise on fellow filmmaker SS Rajamouli. It was a heartwarming yet funny moment when Shankar expressed how proud he felt that Rajamouli released the trailer for his latest movie.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam