14 வருடம் கஷ்டப்பட்டு இறந்த இயக்குனர்..! இப்போ இருக்கும் இயக்குனர்கள் ஏணி வச்சாலும் இவர் உயரத்தை எட்ட முடியாது..!

தமிழ் திரை உலகில் முன்னணியில் இருந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் 1933-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி பிறந்தவர். இவர் மிகச்சிறந்த இயக்குனராகவும், வசன கர்த்தாவாகவும் திகழ்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுடிலும் வெற்றி கொடியை நாட்டியவர். 

இவர் 1963-ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை வசனம் எழுதுகின்ற வாய்ப்பை பெற்றிருந்தார். மேலும் இவர் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தமபுத்திரன், மஞ்சள் மகிமை போன்ற படங்களுக்கு தொடர்ந்து வசனகர்த்தாவாக பணிபுரிந்து இருக்கிறார்.

14 வருடம் கஷ்டப்பட்டு இறந்த இயக்குனர்..

இதனை அடுத்து இயக்குனராக களம் இறங்கிய இவர் பல படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் 1959-ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரை இவர் இயக்கிய தயாரித்த படங்களான கல்யாணப்பரிசு, அவனுக்கு என்று ஒரு மனம், வைர நெஞ்சம், மோகன புன்னகை, நினைவெல்லாம் நித்யா ஆலய தீபம், தென்றலே என்னைத் தொடு, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை.

இதைத்தொடர்ந்து இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் கதை, வசனமும் எழுதி இயக்கியிருக்கிறார். அந்த வரிசையில் ரத்த பாசம் உத்தமபுத்திரன், மஞ்சள் மகிமை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற படங்களை நாம் உதாரணமாக சொல்ல முடியும். 

இவரது படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை தொட்டதோடு வசூலை வாரி கொடுத்த படங்களில் ஒன்றாக திகழ்ந்ததோடு இவரின் படங்கள் என்றால் ஒரு மிகப்பெரிய கூட்டமே அலை மோதி தியேட்டர்களில் சென்று பார்க்கும்.

இப்போ இருக்கும் இயக்குனர்கள் ஏணி வச்சாலும் இவர் உயரத்தை எட்ட முடியாது..

அப்படி தமிழ் திரை உலகில் கோலோச்சிய இந்த இயக்குனர் ஸ்ரீதர் என்பது உங்களுக்கு தற்போது தெள்ளத் தெளிவாக தெரிந்து இருக்கும். அவர் இப்போது இருக்கும் இயக்குனர்களை விட பன்மடங்கு தனது திறமையை வெளிப்படுத்தியவர். எனவே இன்றைய இயக்குனர்கள் ஏணி வைத்தாலும் இவர் உயரத்தை எட்ட முடியாது என்று சொல்லலாம். 

இப்படிப்பட்ட இயக்குனர் சில ஆண்டுகளாக அதாவது 14 ஆண்டுகளாக பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து திரைப்பட இயக்குனர் பணியில் இருந்து முழுவதாக 1991-ஆம் ஆண்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 

இதை அடுத்து தீராத பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 20 சென்னையில் இருக்கும் அவர் இல்லத்தில் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். இப்படிப்பட்ட ஒரு மகா இயக்குனர் ஜாம்பவானை திரையுலகம் இழந்து இன்று வரை அப்படிப்பட்ட ஒரு இயக்குனரை பெற முடியாமல் தவித்து வருகிறது என்று சொல்லலாம். 

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் 14 வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ஸ்ரீதரின் இறப்பு பற்றி பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam