நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் GOAT. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் ரசிகர்களுக்கு பல்வேறு மாற்று கருத்துக்கள் இருந்தன. கலவையான விமர்சனங்களே இந்த படத்துக்கு கிடைத்தது. விஜயின் வில்லத்தனமான நடிப்பு விஜய் ரசிகர்களையே மிரள வைத்தது என்று கூறலாம்.
இருந்தாலும் இந்த படத்தில் திரைக்கதையில் நிறைய கோளாறுகள் இருப்பதாகவும் நிறைய இடத்தில் லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும் பொதுவான ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நடிகர் விஜய் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் பேசும்போது நடிகர் விஜய் மிகப்பெரிய நடிகர் அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல் ஒரு கமர்சியல் வட்டத்திற்குள் ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமே அடக்கி விட்டதாக எனக்கு தோன்றுகிறது.
தன்னுடைய மகன் ஜீவனை காணவில்லை என்ற போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ஓவர் எமோஷனலாக நடித்து விட்டார். இதனால், இன்னொரு முறை இந்த காட்சியை படமாக்கலாம் என்று கேட்டேன்.
அவர், எதுக்கு இன்னொரு டேக்..? என்று கேட்டார். நான் அதற்கு, உங்கள் மகன் மீண்டும் கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அந்த நம்பிக்கையோடு நடிக்க வேண்டும் என்று கூறினேன்.
உடனே மறுபேச்சு பேசாமல் நான் எப்படி கேட்டனோ அதை அப்படியே நடித்துக் கொடுத்தார். அந்த காட்சிக்கு நாயகன் படம் தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
விஜய் அந்த சீனில் நடித்ததை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவருமே கைகளை தட்டி பாராட்டினார்கள். அதேபோல நடிகை சினேகாவிடமும் தன்னுடைய மகன் இறந்ததை சொல்லாமலே புரிய வைக்க வேண்டும். அந்த சீனிலும் விஜய் அசத்தியிருப்பார்.
GOAT படத்தை முடித்திருக்கும் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டார் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.
இது குறித்து மேலதிக தகவல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இணைந்து இருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.
Summary in English : In a recent chat, director Venkat Prabhu stirred the pot by saying that filmmakers have sort of pigeonholed actor Vijay into this commercial hero circle. You know, the kind of roles where he’s always saving the day and delivering those epic one-liners? While there’s nothing wrong with that—Vijay totally rocks it—Prabhu argues that there’s so much more to Vijay than just those flashy commercial roles.