அந்த விஷயத்தில் நான் ரொம்ப வீக்.. நிறைய செலவு பண்ணிட்டேன்.. அவதிக்குள்ளான நடிகை டிஸ்கோ சாந்தி..!

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. நடிகை டிஸ்கோ சாந்தி ஒரு காலகட்டத்தில் முக பிரபலமான ஒரு நடிகையாக இருந்தார்.

வருடத்திற்கு பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்து வந்தார் எப்படி தென்னிந்தியாவில் கவர்ச்சி நடிகையாக சில்க் ஸ்மிதா மிகப் பிரபலமாக இருந்தாரோ அதே அளவிற்கு டிஸ்கோ சாந்திக்கும் வரவேற்பு இருந்தது.

நான் ரொம்ப வீக்

அப்போதைய காலகட்டத்திலேயே கவர்ச்சியில் உச்சபட்சம் காட்டிய ஒரு நடிகையாக டிஸ்கோ சாந்தி இருந்து வந்தார். அதனால் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக டிஸ்கோ சாந்தி இருந்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருக்கு வரவேற்பு என்பதே பெரிதாக கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 1997க்கு பிறகு சினிமாவிலிருந்து விலகினார் டிஸ்கோ சாந்தி அதற்குப் பிறகு அவரது உடல் எடை எக்க சக்கமாக அதிகரித்தது. அது குறித்து சமீபத்தில் பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எனது உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமே எனது உணவு பழக்கம் தான்.

நிறைய செலவு பண்ணிட்டேன்

எனக்கு ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் மாதிரியான உணவுகள் மிகவும் பிடிக்கும். திருமணமான புதிதில் எனது அறையில் எப்பொழுதுமே சாக்லேட் நான் வைத்திருப்பேன். அதனை எனது மகன்கள் எடுத்து சாப்பிடுவதற்காக வருவார்கள்.

அவர்களுக்கு கூட கொடுக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் இரவுகளில் வந்து எடுத்து சாப்பிடுவார்கள். அப்படியெல்லாம் நிறைய சாக்லேட் சாப்பிட்டதால் எனக்கு உடல் எடை எக்கச்சக்கமாக அதிகரித்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.

அவதிக்குள்ளான நடிகை டிஸ்கோ சாந்தி

இதற்காக அதிக செலவு செய்து சைக்கிள் மாதிரியான விஷயங்களை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் அதை நான் பயன்படுத்துவதே இல்லை அதனை பார்க்கும் எனது மகன்கள் துணி காய போடுவதற்கு புது சாதனத்தை வாங்கி வைத்திருக்கிறாயா என்று கேட்கிறார்கள்.

சில சமயங்களில் மிகவும் கஷ்டப்பட்டு ஐந்து கிலோ எடையை குறைப்பேன் பிறகு 5 கிலோ குறைந்துவிட்டது என்பதால் மீண்டும் பழையபடி உணவுகளை சாப்பிடுவேன். மீண்டும் எனக்கு உடல் எடை அதிகரித்து விடும் என்று கூறியிருக்கிறார் டிஸ்கோ சாந்தி. இப்போது வரையிலுமே இந்த சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version